Mohandas – Official Teaser | Vishnu Vishal | Indrajith Sukumaran | Aishwarya Rajesh

வெண்ணிலா கபடிக்குழு என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர்தான் விஷ்ணு விஷால். அறிமுகமான முதல் படத்திலேயே வெற்றியை குவித்த அவருக்கு தொடர்ந்து படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. இதையடுத்து முண்டாசுப்பட்டி, நீர்பறவை, குள்ள நரி கூட்டம், ஜீவா என தொடர்ந்து பல படங்களில் நடித்தார். இந்த படங்கள் அனைத்துமே அவருக்கு வெற்றியை கொடுத்தன. ஆனால் 2018ம் ஆண்டு வெளியான ராட்சசன் படமே அவருக்கு வாழ்வில் திருப்பு முனையாக அமைந்தது. மிகப்பெரிய வெற்றியை கொடுத்து விஷ்ணுவிஷாலின் நடிப்பிற்கு மற்றொரு அங்கீகாரமாய் அந்த படம் விளங்கியது.

Mohandas - Official Teaser | Vishnu Vishal | Indrajith Sukumaran | Aishwarya Rajesh 1

விளம்பரம்

இதையெல்லாம் கடந்து இரண்டு வருட கொரானா இடைவெளிக்குப்பின் இவர் நடிப்பில் வெளியான FIR படம் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியானது. இந்த படம் ஓரளவு வெற்றியை கொடுத்துள்ளது என்றே கூறலாம். மேலும் பல படங்களில் விஷ்ணு விஷால் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது அவர் நடித்து வெளிவர உள்ள படம் தான் மோகன்தாஸ். த்ரில்லர் கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது இந்த படம். மேலும் இந்த படத்தில் பூர்ணிமா பாக்கியராஜ், பிக்பாஸ் புகழ் ஷாரிக், கருணாகரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Mohandas - Official Teaser | Vishnu Vishal | Indrajith Sukumaran | Aishwarya Rajesh 2

விளம்பரம்

விஷ்ணு விஷால் நடிப்பில் அதிரடியாக வெளியாகவுள்ள திரைப்படம்தான் “மோகன்தாஸ்”. இந்த படத்தை முரளி கார்த்திக் இயக்கியுள்ளார். விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இது த்ரில்லர் திரைப்படமாகும். இதன் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவடைந்து வெளியிட தயாராக உள்ளது. இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. அந்த டீசரை நீங்களும் காண.. Watch the below teaser…

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment