தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடியனாக இருந்தவர் நடிகர் விவேக். இவருக்கு “சின்னக்கலைவாணர்”என்று மற்றொரு பெயரும் இருக்கிறது. ஒரு காலத்தில் காமெடி என்றாலே செந்தில் கவுண்டமணி தான் ஞாபகத்திற்கு வருவார்கள். அவர்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் அந்த இடத்தை நிரம்பியவர் விவேக். காமெடி செய்தாலும் அதில் சமூக கருத்தையும் கலந்து செய்பவர் இவர். தமிழ் சினிமாவின் அணைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்த பெருமை விவேக்கிற்கு உண்டு.
விவேக் சூப்பர் ஸ்டார் ரஜினி போல் ஸ்டைல் செய்து சில வீடியோக்களை பதிப்விட்டுளார். இவருக்கு மரம் நடுவதில் ஆர்வம் அதிகம் , நடிகர் மட்டுமல்லாது இளைஞர்களுக்கு சிறந்த உதாரணமாகவும் திகழ்ந்தவர் விவேக். இவரது பணியை ஊக்குவிக்கும் விதமாக இந்திய அரசு இவருக்கு ‘பத்ம ஸ்ரீ விருது’ என்ற விருதை இவருக்கு கொடுத்து கெளரவித்தது. இவர் ஒரு சிறந்த நடிகர் மட்டுமில்லாது சமூக அக்கறை கொண்ட நல்ல மனிதரும் கூட.
இந்த மாமனிதரின் இறப்பிற்கு பல நடிகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் விவேக் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் விவேக் அவர்கள் முதன் முதலில் பாடிய பாடல் தற்போது சமூகவலைத்தளங்களில் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது. விக்ரம் நடித்த கண்டேன் சீதையை என்ற படத்தில் விவேக் அவர்கள் ‘விஞ்ஞானத்தை நம்பி நீ தூங்காதடா தம்பி’ என்ற பாடலை பாடியுள்ளார். தற்போது அந்த பாடல் வைரலாகி வருகிறது.
நடிகர் #விவேக் முதன் முதலில் பாடி நடித்த #பாடல். நம் #Chiyaan. #விக்ரம் நடிப்பில் 2வதாக ரீலீஸ் ஆன படம்.#Vivek #Vivekh #RIPVivekh #Vikram pic.twitter.com/XsABWcoebR
— Shiva Shankar (@Im_SivaShankar) April 17, 2021
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in