ஐ.பி.எல் தொடர் தொடங்கிவிட்டது. நேற்றைய போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைட்ரபாத் அணியுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதியது. டாஸ் வென்ற சன் ரைசேர்ஸ் அணி முதலில் வழக்கம் போல் பௌலிங்கை தேர்வு செய்தனர். முதலில் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி துவக்க ஆட்ட வீரர்கள் சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர். அதில் ஜாஸ் பட்லர் 64 பந்துகளில் 124 ரன்களை அடித்து விளாசினார். அதன் பிறகு களம் இறங்கிய ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் 48 ரன்கள் அடித்து. இருவரும் அணிக்கு மிக பெரிய டோட்டலை கொண்டு வந்தனர்.
220 அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை அடிக்க வேண்டும் என்று களம் இறங்கிய சன் ரைசர்ஸ் அணிக்கு துவக்கம் சரியாக இருந்தாலும் முடிவு மகிழ்ச்சி அளிக்க வில்லை. இந்த அணியின் வீரர்கள் அடித்த அதிகபட்ச ரன்கள் மனிஷ் பாண்டே அடித்த 30 ரன்களும் , பேர்ஸ்ட்டோ அடித்த 30 ரன்களும் மட்டும் தான். இறுதியாக ராஜஸ்தான் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் சன் ரைசேர்ஸ் அணி வீரர்கள் பாட்டின் ஆடி கொண்டிருக்கும்போது சன் ரைசர்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் வார்னர் வாட்டர் பாயாக உள்ளே சென்று வீரர்களுக்கு தண்ணீர் கொடுத்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இது வரை இந்த வருடம் நடந்த போட்டிகளில் கேப்டனாக இருந்து வார்னரை இந்த முறை டீமில் கூட எடுக்கவில்லை சன் ரைசேர்ஸ் அணி. இந்நிலையில் அதை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் , தன்னை தண்ணீர் கொடுக்க செல்ல கூடாது என்று மற்றொரு வீரர் தடுக்க நான் தான் தண்ணீர் கொண்டு பொய் தருவேன் என்று முந்திக்கொண்டு ஓடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
https://twitter.com/Akeel_offl/status/1388844873793474562
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in