Writer – Official Teaser | P. Samuthirakani, Ineya | Franklin Jacob | Govind Vasantha

மக்கள் மத்தியில் தன்னுடைய நடிப்பாலும் சமூகத்தின் பால் அக்கறை கொண்ட கருத்துக்களை கூறியதால் பிரபலமானவர் தான் இயக்குனர் மற்றும் நடிகரான சமுத்திரக்கனி! எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் கனவுகளோடு திரைத்துறையில் சாதிக்க வந்து சவால்கள் பல கடந்து சாதித்த ஒரு நபர் என்றும் இவரை நாம் கூறலாம்! இவ்வாறு இருக்கையில் இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் சமூக அக்கறையை மையமாக கொண்டதாகவே இருக்கும் என்ற காரணத்தால் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை இவரை கொண்டாடாதவர் யாருமே இருக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும்!

Writer - Official Teaser | P. Samuthirakani, Ineya | Franklin Jacob | Govind Vasantha 1

விளம்பரம்

சமீபத்தில் இவர் நடித்து OTT தளத்தில் வெளிவந்த வந்த படம் அவ்வளவு பெரிய பெயர் இவருக்கு கொடுக்கவில்லை என்றாலும் இவர் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் தான் “ரைட்டர்”. இந்த படத்தை “நீலம்” தயாரிப்பு நிறுவனம் சார்பில் இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களும் இணைந்து தயாரிக்க உள்ளார்! கண்ணியமிக்க ஒரு காவல் அதிகாரியாக இதில் சமுத்திரக்கனி இந்த படத்தில் வலம் வருகிறார்! மேலும் சாதாரண ரைட்டர் என்ற காரணத்தினால் இவர் கண்டு பிடிக்கும் சில தவறுகளை அதிகாரத்தில் இருப்பவர்கள் மறைப்பதாக இந்த படம் எடுக்கப்பட்டு உள்ளது போல தெரிகிறது!

Writer - Official Teaser | P. Samuthirakani, Ineya | Franklin Jacob | Govind Vasantha 2

விளம்பரம்

மேலும் சாதிகளால் மட்டும் இல்லாமல் அதிகாரத்தாலும் மக்களை எப்படி ஒடுக்க முடியும் என்பதை தத்ரூபமாக காட்டுவார்கள் என்பதை நம்பலாம்! மேலும், இந்த ரைட்டர் படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகியுள்ளது! அந்த வீடியோவை நீங்களும் பார்த்து மகிழுங்கள்! Watch The Video Below…

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment