Friday, September 24, 2021
விளம்பரம்

எம் ஜி எம் நிறுவனத்தை வாங்கிய அமேசான் நிறுவனம்

எம் ஜி எம் நிறுவனத்தை வாங்கிய அமேசான் நிறுவனம்

எம் ஜி எம் நிறுவனம் திரைபடம் மற்றும் தொடர்களை இயக்கி வெளியிடும் நிறுவனம் ஆகும். சமீபத்தில் வெளியான ஃபார்கோ, வைக்கிங், ஷார்க் டேங்க் போன்ற தொடர்கள் இதில் அடங்கும். ஹாலிவுட்டின் பழம் பெரும் திரைபடம் நிறுவனமான எம் ஜி எம் தற்போது அமேசான் ஓ டி டி தளத்திற்கு விற்கப்பட்டுள்ளது. அமேசான் நிறுவனம் இதற்கு 8.5 பில்லியன் டாலர்கள் செலவு செய்து இருக்கிறது. இது இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 61,434 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது.

விளம்பரம்
விளம்பரம்

இந்த நிலையில் ஓ டி டி தளத்தில் அதிக அளவில் வாடிக்கையாளர்கள் வைத்துள்ள நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் கொஞ்சம் தடுமாற்றத்தை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 1924 ஆண்டில் தொடங்கிய இந்த எம் ஜி எம் நிறுவனம் முதல் ஆண்டிலேயே 26 படங்கள் வெளியிட்டது. மேலும் இந்த நிறுவனம் ஜேம்ஸ் பாண்ட் வைத்து பல படங்கள் எடுத்துள்ளது.

ஜேம்ஸ் பாண்ட் படத்திற்கு உலக அளவில் பல ரசிகர்கள் இருக்கும் பட்சத்தில் அவர் படத்தை இணைய தளத்தில் பார்க்க வேண்டும் என்றால் அமேசான் பக்கம் தான் வந்தாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அமேசான் மேலும் பல வாடிக்கையாளர்கள் சேருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at [email protected]

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

இது போன்ற செய்திகள்

பிரபலமான செய்திகள்

விளம்பரம்
சமீபத்திய செய்திகள்
விளம்பரம்
பிரபலமான செய்திகள்
விளம்பரம்