தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வெகு தீவிரமாக பரவி வரும் நிலையில் பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே வேளைக்கு செல்லாமல் தங்கும் அவளை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நோய் பரவலை கட்டுப்படுத்த மேலும் மத்திய அரசு தவிர்க்கமுடியாத காரணத்தால் சில கூடுதல் விதிமுறைகளை தற்போது அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் வரும் வெள்ளிக்கிழமை (06.05.2021) காலை 4 மணி முதல் அமலுக்கு வர உள்ளது. புதிய கட்டுப்பாடுகளாக கொண்டு வரப்பட்டவை:
1)அணைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 50% தொழிலார்கள் கொண்டே இயங்க வேண்டும்.
2)பயணிகள் ரயில், மெட்ரோ ரயில், தனியார் பேருந்துகள், அரசு பேருந்துகள் மற்றும் வாடகை டாக்ஸிகளில் 50% இருக்கைகள் கொண்டு இயங்க வேண்டும்.3)3000 சதுர அடி மற்றும் அதற்குமேல் நிலப்பரப்பில் அமைந்துள்ள வணிக வளாகங்கள் செயல் பட தடை விதிக்கப்பட்ட நிலையில் அந்த தடை தொடரும்.
4)மேலும் தனியாக செயல் படும் மளிகை, வணிக வளாகங்கள் நண்பகல் 12மணி வரை குளிர்ச்சாதன வசதி இல்லாமல் இயங்க அனுமதி வழங்கியது. மேக்கிலும் 50% வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இவை அனைத்தும் மளிகை மற்றும் அத்தியாவசிய பலசரக்கு கடைகளுக்கு மட்டும் பொருந்தும். மற்ற கடைகளுக்கு தடை தொடரும்.5)அத்தியாவசிய பொருட்களான பால் , மளிகை, மருந்தகங்கள் வழக்கம் போல் எந்த தடையுமின்றி தொடரும்.6)அணைத்து உணவகங்களிலும் பார்சல் மட்டுமே வழங்கப்படும். மேலும் டீ கடைகள் நண்பகல் 12மணி வரை மட்டுமே இயங்கும். விடுதிகள் தங்குபவர்கள் தங்கள் அறையிலேயே உணவு அருந்த வேண்டும் என உத்தரவு.7)உள் அரங்கங்கள் மற்றும் திறந்த வெளியில் சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, விளையாட்டு, கல்வி, கலாச்சார மற்றும் இதர அனைத்து விதமான நிகழ்வுகள் நடக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.8)திரையரங்குகள் மறு அறிவிப்பு வரும் வரை செயல்படாது.9)இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் நபர்கள் 25-லிருந்து 20-தாக குறைக்கப்பட்டுள்ளது.10)நகர்ப்புற அழகு மற்றும் SPA நிலையங்கள் மூடப்பட்டதை அடுத்து ஊரக பகுதிகளில் அமைந்துள்ள அழகு மற்றும் SPA நிலையங்கள் மூட உத்தரவு.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in