பெட்ரோல் டீசல் விலையை கட்டுக்குள் கொண்டு வர முடியும்!

சென்னையில் இன்றைய பெட்ரோலின் விலை ரூ.104.84, நேற்றைய விலையை விட இன்று முப்பது பைசா உயர்ந்துள்ளது. தொடர்ந்து பெட்ரோல் டீசலின் விலை உயர்வு மக்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் பல வழியில் பாதிப்புக்குள்ளாக்குகிறது.பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பெட்ரோல் டீசல் விலையை பொறுத்தவரை இந்த வருடத்தின் ஜனவரியில் இருந்து தொடர்ந்து விலையேற்றத்தை எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன.

பெட்ரோல் டீசல் விலையை கட்டுக்குள் கொண்டு வர முடியும்! 1

விளம்பரம்

கச்சா எண்ணெய் விலை, எண்ணெயின் சுத்திகரிப்பிற்கு ஆகும் செலவினங்கள், சந்தைப்படுத்தும் நிறுவனங்களின் லாப கணக்கீடு, மத்திய மாநில அரசாங்கங்கள் விதிக்கும் வரிகள் ஆகியவற்றைப் பொறுத்தே பெட்ரோல், டீசல் விலை அமையும்.

பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுக்குள் கொண்டுவர ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் தங்களது மறைமுக வரிகளைக் குறைத்துக்கொள்ளுமேயானால் பெட்ரோல் விலையை சிறிது கட்டுப்படுத்தலாம். மேலும் தற்போது எண்ணெய் நிறுவனங்கள் விலையை தீர்மானித்துக் கொள்ளலாம் என்ற அதிகாரத்தை அவர்களிடமிருந்து பறித்து அரசே விலையை தீர்மானிக்க வேண்டும். ஆறு மாதத்திற்கு ஒருமுறை எண்ணெய் விலை தீர்மானிப்பதை நிரந்தரமாக்க வேண்டும். இவ்வாறெல்லாம் செய்வதன் மூலம் பெட்ரோல் டீசல் விலையை கட்டுக்குள் கொண்டு வரலாம்.

விளம்பரம்

பெட்ரோல் டீசல் விலையை கட்டுக்குள் கொண்டு வர முடியும்! 2

ஏற்கனவே மாநில அரசு மூன்று ரூபாய் குறைத்து இருந்த நிலையில், மத்திய அரசும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பெட்ரோல் டீசல் விலையை குறைக்க முன்வருவது அத்தியாவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.மத்திய அரசின் டைனமிக் கொள்கையின் அடிப்படையில், சர்வதேசச் சந்தையின் விலை ஏற்ற இறக்கத்திற்கேற்ப இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் – டீசல் விலையினை நிர்ணயிக்க வேண்டும். ஆனால் தற்போது இவை முறைப்படி நிகழ்வதில்லை என்பதும் விலையேற்றத்திற்கு காரணமானதாக கருதப்படுகிறது. கொள்கை சரிவர பயண்படுத்தப்படுமாயின் இதன்மூலமும் பெட்ரோல் விலையை கட்டுக்குள் கொண்டு வரலாம்.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment