The Indian Times

இனி ஏடிஎம் கார்டு தேவையில்லை – ஏடிஎம் ல் பணம் எடுக்கலாம்.

இனி ஏடிஎம் கார்டு இல்லமால் ஏடிஎம் மூலம் பணம் எடுக்கலாம்.

Advertisement

இந்தியாவில் பணமதிப்பிழப்பு செய்த போது மக்கள் பலர் பணம் புழக்கம் செய்யாமல் கடும் அவதிக்குள்ளாகினர். அதன் விளைவாக பொதுமக்கள் பலர் தற்போதைய சூழலில் பணம் புழக்கத்தை குறைத்து மின்னணு பரிவர்த்தனை மூலம் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறார்கள். இவ்வாறு பணம் பரிமாற்றத்தை செய்ய தற்போது பல செயலிகள் வந்து விட்டது.

இந்த மின்னணு பரிவர்த்தனை செய்ய கூகிள் பே, அமேசான் பே, ஃபோன் பே என்று பல செயலிகள் மக்கள் தங்கள் வசதிக்கேற்ப உபயோகித்து வருகின்றனர். இப்போது பல வங்கிகள் ஏடிஎம் இல்லமால் இந்த செயலியை கொண்டு பணம் எடுக்க வசதிகள் செய்து வருகிறது.

Advertisement

இந்த வசதி ஏற்கனவே எஸ் பி ஐ மற்றும் ஐ சி ஐ சி ஐ போன்ற வங்கிகளில் செயல்பாட்டில் உள்ள நிலையில் தற்போது அனைத்து வங்கி சேவைகளுலும் கொண்டு வர ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த சேவை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இறுதிக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வசதியை உபயோகிக்க வாடிக்கையாளர்கள் தங்கள் kyc நிவர்த்தி செய்திருக்க வேண்டும்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in