தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது

தங்கத்தின் விலை சற்று குறைந்து பொதுமக்கள் மத்தியில் சற்று பாலை வார்த்து இருக்கிறது. இதுவரை கொரோன வைரஸ் காரணமாக பல தரப்பட்ட மக்கள் தங்கள் பணத்தை தங்கத்தில் முதலீடு செய்து வந்தனர். இதனால் தங்கம் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் இருந்து வந்தது.தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது 1

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை சற்று ஏற்றம் இறக்கமாகவே இருந்து வந்தது. இதையடுத்து இன்று தங்கம் விலை சற்று குறைந்து உள்ளது. இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 88 குறைந்து ரூ. 37,192 விற்பனை ஆகிறது. கிராம் ஒன்றுக்கு ரூ.11. குறைந்து ரூ. 4649 விற்பனை செய்யப்படுகிறது.

விளம்பரம்

வெள்ளியை பொருத்து வரை ரூ. 0.60அதிகரித்து ரூ. 72 க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 72000 க்கும் விற்பனை ஆகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment