இளைஞர்களுக்கு முன்னுதாரணமாய் திகழும் 98 வயது முதியவர்!! கெளரவித்து பாராட்டிய அரசாங்கம்!

பெற்றவர்களை பாரமாக நினைத்து முதியோர் இல்லத்திற்கு அனுப்பி வைக்கும் இரக்கமற்ற பிள்ளைகள் வாழ்ந்து கொண்டிருக்கும் நம் நாட்டில் தன் பிள்ளைகளுக்கு பாரமாக இருந்து விட கூடாதென்று 98 வயதிலும் வியாபாரம் செய்து சுயமாக உழைத்து கொண்டிருப்பதை கெளரவித்திருக்கிறது உத்திர பிரதேச மாநில அரசு. உத்திர பிரதேச மாநிலம் ரேபரேலியை சேர்ந்த 98 வயதான விஜய் பால் சிங், இவர் இந்த வயதிலும் தனது பிள்ளைகளுக்கு பாரமாக இருக்க விருப்பம் இல்லை எனக் கூறி, சுயமாக உழைத்து சம்பாதித்துவருகிறார்.

இளைஞர்களுக்கு முன்னுதாரணமாய் திகழும் 98 வயது முதியவர்!! கெளரவித்து பாராட்டிய அரசாங்கம்! 1

விளம்பரம்

இந்த கொரோனா ஊரடங்கிற்கு பிறகு பல லட்சம் இளைஞர்கள் வேலை இழந்து வீட்டில் இருந்ததால் சோம்பேறி ஆகா தொடங்கிவிட்டனர். அப்படி வயது தாண்டி வேலை செய்யாமல் வீட்டில் இருந்தபடி உறங்கும் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாய் இருக்கும் விஜய் பால் சிங்கின் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இவர், ரேபரேலி பகுதியில் தினமும் வேகவைத்த கடலை மசாலா வியாபாரம் செய்து சம்பாரித்து வருகின்றார்.

இளைஞர்களுக்கு முன்னுதாரணமாய் திகழும் 98 வயது முதியவர்!! கெளரவித்து பாராட்டிய அரசாங்கம்! 2

விளம்பரம்

இவரிடம் யாரவது ஏன் இந்த வயதிலும் வேலை செய்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினாலும் அவர் அதற்க்கு கூறும் பதில், “ நான் வேலை செய்யவில்லை என்றால் என் உடல் சோர்ந்து போய் விடும். அதனால் நான் தொடர்ந்து வேலை செய்தால், 12 மாதங்களுக்கும் நான் ஆரோக்கியமாக இருப்பேன் ” எனக் கேள்வி கேட்போரின் மூக்கை உடைக்கும்படி பதில் கூறியுள்ளார்.இவரது வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, விஜய் பால் சிங் இந்த வயதிலும் தன்னம்பிக்கையுடன் உழைப்பதை ஊக்குவிக்கும் விதமாக அவருக்கு தனியாக ரேஷன் கார்டு, ரூ.11,000 ரொக்கம், வாக்கிங் ஸ்டிக் மற்றும் பொன்னாடையை வழங்கி உத்திரபிரேதேச அரசாங்கம் கெளரவைத்துள்ளது.

98-year-old Vijay pal singh sells chana | U.P Raebareli 79 km from Lucknow #Flyingbeast #shorts

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment