தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாய் வலம் வரும் நடிகர் தனுஷ். தமிழ் சினிமாவிற்கு மட்டுமல்ல இந்திய சினிமாவுக்கே பெருமை சேர்த்த நடிகர்களுள் இவரும் ஒருவர். ஆரம்ப காலத்தில் தன் தோற்றத்திற்காக பல விமர்சனங்களை இவர் சந்தித்து இருந்தாலும், இன்று தன் கடின உழைப்பால் தன் திறமையை ஹாலிவுட் வரை கொண்டு சென்றுள்ளார். ஹோலிவுட்டில் தற்போது grey man என்ற படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவர் ஹிந்தியில் நடித்துள்ள அட்ராங்கி ரே படத்தின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் அக்ஷய் குமார், தனுஷ் மற்றும் சாரா அலி கான் ஆகியோர் நடித்து வரவிருக்கும் இந்திய காதல் நாடக படம் அட்ராங்கி ரே . இந்த படம் டி-சீரிஸ், கலர் யெல்லோ புரொடக்ஷன்ஸ் மற்றும் கேப் ஆஃப் குட் ஃபிலிம்ஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் தயாரித்துள்ளது. இது முதலில் காதலர் தினத்துடன் இணைந்து பிப்ரவரி 14, 2021 அன்று திரையரங்குகளில் உலகளவில் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால், இந்தியாவில் கொரோனா தொற்றுநோய் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போனது.
https://twitter.com/RIAZtheboss/status/1375796271370264580
தற்போது இந்த படம் இறுதியாக ஆகஸ்ட் 6, 2021 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் அக்ஷய் குமாருடன் சேர்ந்து தனுஷும் நடிப்பதால் இந்த படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in