எத்தனையோ வீரர்கள் தமிழ்நாட்டிலிருந்து சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இடம் பிடித்திருந்தாலும் தற்போது தமிழ்நாட்டு நெஞ்சங்களில் இடம்பிடித்த கிரிக்கெட் வீரர் நடராஜன். சாதாரண கிராமத்தில் பிறந்து வளந்து இன்று தமிழ் நாட்டிற்கே பெருமை சேர்த்த சிங்கம் நடராஜன். இவர் கடந்த வருடம் ஐ.பி.எல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் பங்கேற்று விளையாடினார். ஹைதராபாத் அணிக்கு ஒரு மிக சிறந்த பக்க பலமாக இருந்தார் என்றே கூறலாம்.
தனது மிக சிறந்த பந்து வீச்சில் சர்வதேச கிரிக்கெட் வீரர்களே திணறும் படி செய்தார் நடராஜன். ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக விளையாடிய நடராஜனுக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அதை பயன்படுத்தி கொண்ட நடராஜன் தன்னுடைய திறமையை சர்வதேச அளவில் வெளிச்சம் போட்டு காட்டினார். முழுக்க முழுக்க இளம் வீரர்கள் நிறைந்த இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வரலாறு காணாத வெற்றி பெற்றது. இதில் சிறப்பாக விளையாடிய நடராஜனுக்கு மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா கார் ஒன்றை பரிசாக கொடுத்தார்.
தனக்கு பரிசாக அளிக்கப்பட்ட காரை நடராஜன் தான் கிரிக்கெட்டில் இந்தளவிற்கு உச்சம் அடைந்ததற்கு முக்கிய காரணமாய் இருந்த பயிற்சியாளர் ஜெயப்ரகாஷிற்கு பரிசளித்தார். இந்த சம்பவத்தின் மூலம் நடராஜன் மக்கள் மனதில் இன்னும் உயர்ந்துவிட்டார் என்றே கூறலாம்.
https://twitter.com/balajidtweets/status/1377543097266147330
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in