2021 ஐ.பி.எல். தொடர் தொடங்கி விட்டது. கொரோனா பரவலின் காரணமாக ரசிகர்கள் யாரும் இல்லாமல் இந்த ஐ.பி.எல் நடைபெறுகிறது. இதுவரை இந்த சீசனுடைய 12 போட்டிகள் முடிவடைந்துள்ளது. புள்ளி பட்டியலில் முதல் இடத்தில கோலி தலைமையிலான பெங்களூரு அணியும் , இரண்டாவது இடத்தில் தோனி தலைமையிலான சென்னை அணியும் , மூன்றாவது இடத்தில் டெல்லி அணியும் உள்ளது. வழக்கம் போல் எல்லா ஐ.பி.எல்லிலும் நடக்கும் நிகழ்வுகளாக இல்லாமல் இந்த ஐ.பி.எல் தொடரில் சில ஆச்சரியங்களும் அவ்வப்போது நடக்கின்றது.
அந்த வகையில் தற்போது ஹைட்ரபாத் அணியின் ரசிகர்களுக்கு மிக பெரிய அதிர்ச்சி தகவல் வெளி வந்துள்ளது. நம் தமிழ் நாட்டின் சிங்கம் இந்திய அணியின் யார்க்கர் கிங் இந்த முறை ஐ.பி.எல் தொடரில் இனி வரும் போட்டிகளில் இடம் பெற போவதில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. ஏற்கனவே இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி மிகவும் சுமாராக பெர்பார்ம் செய்து வருகிறது.
இந்நிலையில் நடராஜனும் இந்த முறை அணியில் பங்கு பெற போவதில்லை என்ற செய்து ரசிகர்களை சோகத்திற்குள்ளாக்கியுள்ளது. சென்ற ஆண்டு ஐ.பி.எல் சீசனில் ஹைதராபாத் அணிக்கு நடராஜன் மிக பெரிய பக்கபலமாக இருந்தது அனைவரும் அறிந்தது. இந்த முறை அவருக்கு முட்டியில் சர்ஜரி செய்யவுள்ளதாகவும் , இதனால் இனி வரும் போட்டிகளில் அவர் பங்குபெற போவதில்லை என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து நடராஜன் மிகவும் சோகமாக ட்விட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
https://twitter.com/SunRisers/status/1385544430556381187
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in