“இந்த வருஷம் ஐ.பி.எல் ல என்னால விளையாட முடியாது” நடராஜனின் கண்கலங்க வைக்கும் பதிவு

விளம்பரம்

2021 ஐ.பி.எல். தொடர் தொடங்கி விட்டது. கொரோனா பரவலின் காரணமாக ரசிகர்கள் யாரும் இல்லாமல் இந்த ஐ.பி.எல் நடைபெறுகிறது. இதுவரை இந்த சீசனுடைய 12 போட்டிகள் முடிவடைந்துள்ளது. புள்ளி பட்டியலில் முதல் இடத்தில கோலி தலைமையிலான பெங்களூரு அணியும் , இரண்டாவது இடத்தில் தோனி தலைமையிலான சென்னை அணியும் , மூன்றாவது இடத்தில் டெல்லி அணியும் உள்ளது. வழக்கம் போல் எல்லா ஐ.பி.எல்லிலும் நடக்கும் நிகழ்வுகளாக இல்லாமல் இந்த ஐ.பி.எல் தொடரில் சில ஆச்சரியங்களும் அவ்வப்போது நடக்கின்றது.

இப்போது டிரெண்டிங்   என்னது இது பவுலிங் ஆக்‌ஷனா..? மிரண்டுபோன பேட்ஸ்மேன் - வைரல் வீடியோ

"இந்த வருஷம் ஐ.பி.எல் ல என்னால விளையாட முடியாது" நடராஜனின் கண்கலங்க வைக்கும் பதிவு 1

விளம்பரம்

அந்த வகையில் தற்போது ஹைட்ரபாத் அணியின் ரசிகர்களுக்கு மிக பெரிய அதிர்ச்சி தகவல் வெளி வந்துள்ளது. நம் தமிழ் நாட்டின் சிங்கம் இந்திய அணியின் யார்க்கர் கிங் இந்த முறை ஐ.பி.எல் தொடரில் இனி வரும் போட்டிகளில் இடம் பெற போவதில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. ஏற்கனவே இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி மிகவும் சுமாராக பெர்பார்ம் செய்து வருகிறது.

இப்போது டிரெண்டிங்   பார்ப்பவர்களை பதறவைத்த பந்து வீச்சு! கழுத்தில் அடிவாங்கிய முகமத் நபி

"இந்த வருஷம் ஐ.பி.எல் ல என்னால விளையாட முடியாது" நடராஜனின் கண்கலங்க வைக்கும் பதிவு 2

இந்நிலையில் நடராஜனும் இந்த முறை அணியில் பங்கு பெற போவதில்லை என்ற செய்து ரசிகர்களை சோகத்திற்குள்ளாக்கியுள்ளது. சென்ற ஆண்டு ஐ.பி.எல் சீசனில் ஹைதராபாத் அணிக்கு நடராஜன் மிக பெரிய பக்கபலமாக இருந்தது அனைவரும் அறிந்தது. இந்த முறை அவருக்கு முட்டியில் சர்ஜரி செய்யவுள்ளதாகவும் , இதனால் இனி வரும் போட்டிகளில் அவர் பங்குபெற போவதில்லை என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து நடராஜன் மிகவும் சோகமாக ட்விட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

விளம்பரம்

விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment