பிக் பாஸ் வீட்டில் வித்தியாசத்திற்கு பெயர் போனவர் தான் ஐக்கி பெரி. இவர் தலை முடியின் நிறத்தை வைத்தே பலரும் இவர் வீட்டிற்குள் வந்தப்போது தமிழரே இல்லை என்ற எண்ணத்தில் இருந்தது உண்மையே! ஆனால் பிறகு தான் தெரிந்தது தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று மக்களால் அழைக்கப்படும் தஞ்சாவூரில் பிறந்து வளர்ந்த ஒரு அக்மார்க் தமிழ்ப்பெண் என்று! பிறகு இவர் சிறு வயதிலிருந்தே இசை, நடனம், ஓவியம் என பல திறமைகளை கற்றுத் தேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது!
அதுமட்டுமில்லாமல் இவர் ஒரு அழகு சாதனம் மற்றும் தோல் சம்மந்தமான மருத்துவரும் கூட. பிறகு தான் சிறு வயதில் கற்ற இசை ஞானத்துடன் ஆங்கிலப் புலமையின் மகிமையோடு தமிழ் கலந்த ராப் பாடல்களை பாடத் தொடங்கினார்! பின்பு தான் பாட விரும்பிய பாடல்களுக்கும் மக்களுக்கை சொல்ல வேண்டிய கருத்துக்களை தனக்கு பிடித்த வகையில் கூற இவரே சொந்தமாக பாடலுக்கு வரிகள் எழுதி அதைப் பாட தொடங்கினார்! அதனால் அவருக்கு ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் அதிக ரசிகர்களைக் கொண்ட ஒரே தமிழ்ப்பெண் இவராகத்தான் இருக்க முடியும்! இத்தனை பெருமைகளை தன்னகத்தே கொண்டு தான் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்! ஆரம்பத்திலிருந்தே பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ள போட்டியாளர்கள் இவரை வித்தியாசமாகவே பார்த்து பேசி பழகி வந்தனர்! பின்பு இவரும் தன்னால் முடிந்த அளவு வீட்டிற்குள் போட்டிகளில் விளையாடி அதிக அளவு பங்களிப்பை வழங்கினார்!
பின்பு, ஏனோ தெரியவில்லை சக போட்டியாளர்களோடு இவர் நேரம் செலவு செய்ததே கிடையாது! அவர்களுக்கு பதிலாக பிக் பாஸ் வீட்டில் உள்ள கேமராக்களுக்கு செல்லப் பெயர் வைத்து அவைகளோடு பேசி வந்தார்! அதோடு நிறுத்தாமல் பறவைகள், அணில்கள், பூச்சிகளோடும் அதிகாலையில் எழுந்து பேச்சுவார்த்தை நடத்தும் காட்சிகளைப் பாத்திருப்போம்! ஆனாலும் இவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட முக்கிய காரணம் இவர் மிகவும் நல்லவராக இருந்தது தான்! வீட்டிற்குள் இவருடன் நல்ல விதமாக நேர்மையாக பாசமாக பழகி வந்த ஒரு சிலர் என்றால் அது அண்ணாச்சி மற்றும் ராஜூ தான்! மற்ற அணைவருமே இவர் மேல் அதீத காழ்ப்புணர்ச்சியில் இருந்தது அவ்வப்போது வெட்ட வெளிச்சமாக தெரிந்தது! அதிலும் குறிப்பாக பிரியங்காவுக்கு கொஞ்சம் அதிகமாக இருந்தது என்றே சொல்லலாம்!
பிக் பாஸ் வீட்டில் அதிகமாக நல்லவராக இருப்பதும் கடினம் தான்! அதனால் தான் என்னவோ மக்கள் இவரை இந்த வீட்டில் இருந்தது போதும் என்று வெளியே அனுப்பிவிட்டனர்! நரைத்த வெள்ளைத் தலையோடு வீட்டிற்குள் வலம் வந்த ஐக்கியின் தலை முடிக்கு மீண்டும் கருப்பு சாயமடித்து ஐக்கியின் அழகை மேலும் கூட்டி தமிழக மக்களுக்குக் காட்டியப் பெருமை பிக் பாஸுக்கே சேரும்! இனி ஐக்கியின் இசைப்பயணம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்ததன் பிறகு உலகமெங்கும் இவர் புகழ் ஓங்க வாழ்த்துக்கள்! பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின் ஐக்கி பெரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது! அந்த வீடியோவை நீங்களும் பார்த்து மகிழுங்கள்! Watch The Post & Video Below…!

https://twitter.com/CinemaN37689635/status/1464996940995723282
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in