R:23 Criminals Diary Sneak Peek | Yashika Anand | Imman Annachi | Pavithra Lakshmi

பிக் பாஸ் வீட்டில் 65 நாட்களுக்கும் மேலாக இருந்து ஒவ்வொரு நாளும் சோர்வடையாமல் புத்துணர்ச்சியோடு விளையாடுவர் என்றால் அது இமான் அண்ணாச்சி தான்! நெல்லை தமிழ் கொள்ளை அழகு என்று சொல்லும் அளவிற்கு நெல்லை தமிழில் பேசி நகைச்சுவை செய்து அனைவர் மனதையும் கொள்ளை கொண்டவர் என்றும் சொல்லாம். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார்! வீட்டிற்குள்ளும் தன்னால் முடிந்த அளவுக்கு அங்குள்ளவர்களை மகிழ்வித்து சிறப்பாக விளையாடி வந்தார்! மனதில் பட்டத்தை அப்படியே சொல்லியதால் சில நேரங்களில் சில பேரிடம் வெறுப்பையும் சம்பாதித்து கொண்டார்!

R:23 Criminals Diary Sneak Peek | Yashika Anand | Imman Annachi | Pavithra Lakshmi 1

விளம்பரம்

இமான் அண்ணாச்சிக்கு வீட்டில் அன்பு மழை பொழிந்து அண்ணனாக ஏற்றுக்கொண்டவர் தான் ராஜு! இனம்புரியாத பந்தம் ஏற்பட்டதால் அண்ணாச்சி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போது துக்கம் தாங்காமல் உடைந்து போன ராஜுவின் கண்களில் கண்ணீர் ஆறாக ஓடியது! அது மட்டுமில்லாமல் அண்ணாச்சி கண்களும் கலங்கியதை பார்க்கும்போது அனைவரது கண்களும் சற்று கலங்கின என்பதே நிதர்சனமான உண்மை! தாமரை செல்வி, அக்க்ஷரா, வருண், சிபி, பிரியங்கா என வீட்டில் உள்ள அனைவருமே இவர் பிரியும் பொழுது கண்ணீருடன் வழியனுப்பி வைத்தனர்! இது மட்டுமில்லாமல் இவர் வெளியேறியபோது பலத்த ஆதரவும் இவருக்காக ஒலித்தது என்பது மறுக்கமுடியாத உண்மையே!

R:23 Criminals Diary Sneak Peek | Yashika Anand | Imman Annachi | Pavithra Lakshmi 2

விளம்பரம்

நன்கு விளையாடிய காரணத்தால் இவருக்கு பதில் அபிநய் தான் வெளியேறி இருக்க வேண்டும் என்று பலரும் கருத்துக்களை பதிவு செய்தனர்! மக்கள் முடிவை மனதார ஏற்று கொண்டு இமான் அண்ணாச்சி பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினாலும் அதன் பிறகு கமல் ஹாசனுடன் நடிக்கும் வாய்ப்பையும் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றது கூடுதல் சிறப்பாகும்! இந்நிலையில் இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு சில காலங்களுக்கு முன்பு நடித்த படத்தின் பிரத்யேக காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது! அந்த வீடியோவை நீங்களும் பார்த்து மகிழுங்கள்! Watch The Video Below…

R:23 Criminals Diary Sneak Peek | Yashika Anand | Imman Annachi | Pavithra Lakshmi | @Infinix India

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment