திடீரென காலில் விழுந்த ஐஸ்வர்யா ராயினால் பதறிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

உலக அழகிகள் என பலர் இருந்தாலும்,இனிமேல் வந்தாலும் இந்தியாவில் உலக அழகி என்று சொன்னாலே நியாபகம் வருவது ஐஸ்வர்யா ராய் மட்டும்தான்.அந்தளவிற்கு ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார் ஐஸ்வர்யா ராய்.இன்றும் அவர் ரசிகர்களுக்கு உலக அழகி தான்.அழகு மட்டும் இல்லாமல் தனது நடிப்பினால் பல ரசிகர்களை தனது வசம் இழுத்தவர்.இவருக்கென பல மொழி சினிமாவிலும் பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.இவர் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்றுக்கொண்ட பிறகு நடிப்பில் ஈடுபாடு காட்டாமல் குடும்ப வாழ்க்கையை கவனித்து வருகிறார்.மேலும் அதே சமயம் நல்ல படங்கள் வந்தால் அதில் நடித்து ரசிகர்களை மகிழ்ச்சியாக்கியும் வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

திடீரென காலில் விழுந்த ஐஸ்வர்யா ராயினால் பதறிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 1

விளம்பரம்

தற்போது ஐஸ்வர்யா ராய் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் விக்ரம்,கார்த்தி,ஜெயம் ரவி,த்ரிஷா,ஐஸ்வர்யா ராய் மற்றும் ஜெயராம் என பலரையும் நடிக்க வைத்து சோழர்களின் பிரம்மாண்ட காவியத்தினை உருவாக்கியுள்ளார் மணிரத்தினம்.மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளது.ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

திடீரென காலில் விழுந்த ஐஸ்வர்யா ராயினால் பதறிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 2

விளம்பரம்

நேற்று இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசைவெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு வந்த ஐஸ்வர்யா ராய் , ரஜினிகாந்தை பார்த்த உடனே அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியுள்ளார்.இந்த வீடியோவை நேற்று நிகழ்ச்சிக்கு சென்ற குக் வித் கோமாளி வித்யூலேகா தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது

Ponniyin Selvan VLOG !!! Audio Launch With Mani Ratnam | AR Rahman | Rajini | Kamal Haasan | Trisha

விளம்பரம்

Embed video credits : VIYDURAMAN

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment