தமிழ் சினிமாவுக்கு வித்தியாசமான கதைகளை கொடுப்பவர் சக்தி சவுந்தரராஜன்.பல புதிய கதைகளை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்துவதில் இவர் வல்லவர்.மிருதன்,டிக்டிக்டிக் மற்றும் டெடி போன்ற பல வித்தியாசமான கதைகளை பிரமாதமாக இயக்குபவர்.தற்போது நடிக ர் ஆர்யாவை வைத்து கேப்டன் படத்தினை இயக்கியுள்ளார்.முன்னதாக இதே கூட்டணியில் உருவாகிய டெடி படம் நல்ல வரவேற்பினை பெற்றது.தற்போது அந்த வரிசையில் ஏலியன்களை மையமாக கொண்டு கேப்டன் படம் எடுக்கப்பட்டுள்ளது.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார்.இமான் இசையமைத்துள்ளார்.இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.குழந்தைகளுடன் பெரியவர்கள் படத்தினை கண்டு களித்து வருகின்றனர்
படத்தின் கதை
சிறந்த வீரராக யாராக இருந்தாலும் எதிர்த்து எடுத்த மிஷினில் வெற்றிபெறுபவர் ஆர்யா.இவரது டீமில் ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத் ராஜ், காவ்யா ஷெட்டி ஆகியோர் உள்ளனர்.எந்த மிஷினை எடுத்தாலும் ஆர்யா தலைமையில் இந்த டீம் சிறப்பாக செய்து முடிப்பது வழக்கம்.அதன்படி இந்த டீமிடம் செக்டர் 42 என்ற மிஷின் ஒப்படைக்கப்படுகிறது.மினரல் தொழிற்சாலை இருக்கும் அந்த இடம் பல ஆண்டுகளாக மனித நடமாட்டமே இல்லாமல் இருக்கிறது.அந்த இடத்தினை மீண்டும் இயக்க அரசு முடிவெடுத்து ராணுவத்திடம் அப்பகுதியை சோதித்து தடையில்லா சான்றிதழ் அளிக்க உத்தரவிடுகிறது.இந்த இடத்தில் வேறு ஒரு டீமை அனுப்பவே அவர்கள் யாரும் உயிருடன் திரும்பவில்லை இதனால் ஆர்யா டீமிடம் இந்த மிஷின் ஒப்படைக்கப்படுகிறது.அங்கு ஆர்யா டீமுடன் செல்கிறார் அங்கு அவர் வித்தியாசமான உருவத்தினை காண்கிறார் ,அது ஆர்யாவின் டீமை தாக்குகியது.அந்த உருவம் என்ன? ஆர்யாவின் டீமுக்கு என்ன ஆகியது?அதனை எப்படி எதிர்கொண்டார் ஆர்யா என்பதே மீதி படத்தின் கதை
படத்தின் விமர்சனம்
வழக்கம்போல இப்படத்திலும் ஆர்யா தனது 100 சதவீத நடிப்பினை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார்.ராணுவ வீரராக கம்பீரமாக வரும் அவரது தோற்றம் புல்லரிக்க செய்கிறது.அவர் டீமில் உள்ள ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத் ராஜ், காவ்யா ஷெட்டி தங்களது சிறப்பான நடிப்பினை காண்பித்து அசத்தியுள்ளனர்.சிம்ரன் தனது கதாபாத்திரத்திற்கு கட்சிதமாக நடித்து அசத்தியெடுத்துள்ளார். தனது பாதையில் தவறாமல் சென்று படத்தினை தரமாக இயக்கும் சக்தி சவுந்தரராஜன் இம்முறை அவரது பாதையில் இருந்து தவறியுள்ளார்.படத்தின் கதைக்களம் சரியாக இருந்தாலும் 2 மணி நேரம் ஓடும் படத்தில் ரசிகர்கள் உற்சாகப்படும் அளவிற்கு எந்த காட்சிகளும் அமையாதது வருத்தமே.அதேபோல VFX பெருமளவு சொதப்பியெடுத்துள்ளது.இமானின் பாடல்களும் சொல்லும் அளவிற்கு ஒன்றும் இல்லை,பின்னணி இசை ஓகே என்று கூறலாம்.மொத்தத்தில் படம் எதிர்பார்த்த அளவு இல்லை
கேப்டன் படத்திற்கு தி இந்தியன் டைம்ஸ் வழங்கும் ரேட்டிங் – 2/5
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in