மீண்டும் வல்லவன் ஆக மாறி ROMANCE செய்யும் சிம்பு…உன்ன நினைச்சதும் பாடல் வெளியாகியது..வெந்து தணிந்தது காடு

பிரபல இயக்குனர் டி ராஜேந்தர் மகன் சிலம்பரசன்.இவரை ரசிகர்கள் லிட்டில் சூப்பர் ஸ்டார் ,சிம்பு என செல்லமாகதான் அழைப்பார்கள்.அந்தளவிற்கு இவர் மீது பிரியம் வைத்துள்ளனர். மகனை நடிகனாக்க வேண்டும் என ராஜேந்தர் சிம்புவை குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் உறவை காத்த கிளி என்ற படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைத்தார்.பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக தொடர்ந்து நடித்து அசத்தியுள்ளார்.அப்பாவை போல இவரும் பல திறமைகளை கொண்டவர்.2002ஆம் ஆண்டு காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு கதாநாயகனாக அறிமுகமாகி பட்டிதொட்டி எங்கும் பெரும் வரவேற்பினை பெற்றார்.நடை உடை பாவனை என அனைத்திலும் புதிய யுக்தியை கையாண்டு ரசிகர்களை தனது வசம் இழுத்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

மீண்டும் வல்லவன் ஆக மாறி ROMANCE செய்யும் சிம்பு...உன்ன நினைச்சதும் பாடல் வெளியாகியது..வெந்து தணிந்தது காடு 1

விளம்பரம்

பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் இன்று பெரும் உச்ச நட்சத்திரமாக உள்ளார் சிலம்பரசன்.நடிகர் மட்டுமில்லாமல் இசையமைப்பாளர்,பாடகர்,பாடலாசிரியர் என பல திறமைகளை தன்னுள் கொண்டுள்ளவர்.அண்மையில் உடல் எடை அதிகம் இருந்த சிம்பு தற்போது ரசிகர்களுக்காக முற்றிலும் குறைத்து கேலி செய்தவர்கள் வாயை அடைத்து படங்களில் பழைய சிம்புவாக நடித்து அசத்தி வருகிறார்.இயக்குனர் கவுதம் மேனன் கூட்டணியில் இவர் நடித்த விண்ணை தாண்டி வருவாயா படம் பெரும் வரவேற்பினை பெற்றது.தற்போது பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்துள்ளார்.இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.ஐசரி கணேசன் இப்படத்தினை தயாரித்துள்ளார்,

மீண்டும் வல்லவன் ஆக மாறி ROMANCE செய்யும் சிம்பு...உன்ன நினைச்சதும் பாடல் வெளியாகியது..வெந்து தணிந்தது காடு 2

விளம்பரம்

அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.தற்போது இப்படத்தில் உள்ள உன்ன நினைச்சதும் பாடல் வீடியோ வெளியிட்டுள்ளது.இப்பாடலை கவிஞர் தாமரை எழுதியுள்ளார். ஸ்ரேயா கோஷல் ,சார்தக் கல்யாணி ஆகியோர் பாடியுள்ளனர்.இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது

Unna Nenachadhum Lyric Video | VTK | Silambarasan TR | Gautham Vasudev Menon|@A. R. Rahman| Vels

விளம்பரம்

Embed video credits : Think music india

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment