நடிகர் ராமராஜனை தமிழ் சினிமாவில் தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள்.அந்தளவிற்கு சினிமாவில் ஒரு காலகட்டத்தில் கொடிகட்டி பறந்தவர்.திரையரங்கில் வேலை செய்து வந்த ராமராஜன் தனது கடின உழைப்பால் சினிமாவில் கதாநாயகனாக ஜொலித்தார்.இவர் நடித்த கரகாட்டக்காரன் படம் மாபெரும் வெற்றிபெற்றது.கமல்ஹாசன், ரஜினிகாந்த்திற்கெல்லாம் பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியவர் இவர்.பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்து அசத்தியுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
இவர் நடிகர் ஆக மட்டும் இல்லாமல் இயக்குனர் ஆகவும் சினிமாவை கலக்கினார்.பல படங்களை தமிழில் இயக்கியுள்ளார்.பின்னர் அரசியலில் களம் இறங்கிய ராமராஜன் படத்தில் நடிப்பதற்கு முழு இடைவெளி விட்டார்.இவர் ரசிகர்கள் திரும்ப இவர் நடிக்க மாட்டாரா என ஏங்கி வந்தனர்.தற்போது 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் படம் நடித்து அசத்தியுள்ளார் ராமராஜன்.வயதானாலும் அதே கம்பீர குரல் உடன் பட்டையை கிளப்பியுள்ளார்.
இயக்குனர் ராகேஷ் இயக்கத்தில் ராமராஜன் கதாநாயகனாக நடிக்கும் படம் சாமானியன்.இப்படத்தில் இவருடன் எம் எஸ் பாஸ்கர்,ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.நேற்று இப்படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியாகி வைரலாகிய நிலையில் தற்போது அதனை தொடர்ந்து இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.டீசரில் ராமராஜன் வழக்கம் போல மிரட்டியுள்ளார்.ரசிகர்கள் ராமராஜனை ஆவலாக கண்டு படம் வெற்றிபெற வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
Embed video credits : Tips Tamil
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in