வசூலில் பத்தாயிரம் கோடியை கடந்தும் வெற்றியை எட்டாத அவதார் 2…அப்போ இன்னும் எத்தனை கோடி வேணும் தெரியுமா?

இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் ஹிட் அடித்த படம் அவதார்.இப்படத்திற்கு இன்று வரை பல ரசிகர்கள் கூட்டம் உள்ளது.அவதார் முதல் பாகத்திற்கு பிறகு இரண்டாவது பாகத்தினை எடுக்க இயக்குனர் ஜேம்ஸ் 2014 ஆம் ஆண்டு திட்டமிட்டார்.ஆனால் இறுதியாக 2018ல் தான் பட வேலைகளை தொடங்கினார்.இரண்டாம் பாகத்துடன் சேர்த்து 3ஆம் பாகத்தின் சில காட்சிகளையும் எடுத்துள்ளதாகவும்,பட்ஜெட் குறைவாகியுள்ள காரணத்தினால் 3ஆம் பாகத்தின் படப்பிடிப்பை நிறுத்திவைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.தற்போது சுமார் 13 ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகமான அவதார் – தி வாட்டர் ஆஃப் வே உலகம் முழுவதும் 160 மொழிகளில் வெளியாகியுள்ளது.

வசூலில் பத்தாயிரம் கோடியை கடந்தும் வெற்றியை எட்டாத அவதார் 2...அப்போ இன்னும் எத்தனை கோடி வேணும் தெரியுமா? 1

விளம்பரம்

இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்றது.ரசிகர்கள் தொடர்ந்து படத்தினை கண்டு களித்து வருகின்றனர்.பல திரையரங்குகள் தமிழகத்தில் ஹவுஸ்புல் காட்சிகளாக சென்று வருகிறது.படத்தில் விசுவல் காட்சிகள் நேரில் காண்பது போல அமைந்துள்ளதாக ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இப்படம் சுமார் 250 மில்லியன் டாலர் செலவில் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இப்படத்தின் வசூல் விபரங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது

வசூலில் பத்தாயிரம் கோடியை கடந்தும் வெற்றியை எட்டாத அவதார் 2...அப்போ இன்னும் எத்தனை கோடி வேணும் தெரியுமா? 2

விளம்பரம்

தற்போது இப்படம் உலகம் முழுவதும் வசூலில் கலக்கி வருகிறது.முதல் படத்தினை போலவே இப்படத்திற்கும் ரசிகர்கள் தங்களது பலத்த ஆதரவை அளித்து வருகின்றனர்.இதுவரை இப்படம் சுமார் 10ஆயிரம் கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது,இந்நிலையில் மேலும் 700 மில்லியன் டாலர் வசூல் குவித்தால் மட்டுமே இப்படம் வெற்றிபெறும் என தகவல்கள் வெளியாகி வருகிறது.இந்த வசூலை படம் மேலும் எதிர்பார்த்த பெறுமா என பெரும் என எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் கிளம்பியுள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment