மனிதத்தினை பரப்பியதா இந்த அயோத்தி – திரை விமர்சனம் (?/5)

விளம்பரம்

நடிகர் மற்றும் இயக்குனருமான சசிகுமார் நடிப்பில் இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகியுள்ள படம் தான் அயோத்தி.இப்படத்தில் இவருடன் யஷ்பால் சர்மா மற்றும் ப்ரியா அஸ்ராணி ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்தினை ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரித்துள்ளது,ரகுநந்தன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் பார்த்து வெளியே வரும் ரசிகர்கள் அழுதுகொண்டே படத்தையும் சசிகுமாரையும் பாராட்டி வருவது இப்படத்தின் உண்மையான வெற்றியாகும்,அப்படி ரசிகர்கள் அழும் அளவிற்கு படத்தில் என்ன உள்ளது என கீழே விமர்சனத்தில் காணலாம் வாருங்கள்.

மனிதத்தினை பரப்பியதா இந்த அயோத்தி - திரை விமர்சனம் (?/5) 1

விளம்பரம்

படத்தின் கதை:

படத்தில் சசிகுமார் ஆம்புலன்ஸ் டிரைவராக வருகிறார்.யஷ்பால் சர்மா தனது மனைவி மற்றும் மகளுடன் அயோத்தியிலிருந்து ராமேஸ்வரம் வருகிறார்.மனைவி குழந்தைகள் மீது பாசம் இல்லாத மனிதராக வருகிறார் யஷ்பால்,இவர் செய்த பிரச்சனையால் ராமேஸ்வரம் அருகே அவர்களது கார் விபத்துக்குள்ளாகிவிடுகிறது.இந்த விபத்தில் யஷ்பால் மனைவி உயிரிழந்துவிடுகிறார்.இந்நிலையில் அன்று ஒரே ஒரு விமானம் மட்டும் காசிக்கு செல்ல உள்ள நிலையில் மனைவியின் உடலை பிரேத பரிசோதனை செய்யகூடாது என யஷ்பால் போராடுகிறார்.இந்நிலையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக வரும் சசிகுமார் யஷ்பாலுக்கு உதவி செய்து அவரின் மனைவியின் உடம்பை காசிக்கு அனுப்பிவைக்க முடிவெடுக்கிறார்,இதில் அவருக்கு பல கஷ்டங்கள் வருகிறது.இந்த கஷ்டங்களை எப்படி சமாளித்தார்,இறந்துபோன பெண்ணின் உடலை காசி கொண்டு சேர்ந்தாரா என்பதே மீதி படத்தின் கதை

விளம்பரம்

மனிதத்தினை பரப்பியதா இந்த அயோத்தி - திரை விமர்சனம் (?/5) 2

படத்தின் விமர்சனம்

விளம்பரம்

இதுபோல பல கதைகள் வந்திருந்தாலும் இந்த கதை மிகவும் புதியது என்றே கூறலாம்.மனிதன் மதங்களை கடந்து செய்யும் உதவியை அழகாக விளக்கியுள்ளார் இயக்குனர் மந்திரமூர்த்தி.படம் முழுவதையும் சசிகுமார் ஒரே ஆளாக தூக்கி சென்றுள்ளார்.படத்தில் நாயகனாக நடித்துள்ள சசிகுமார் நடிக்கவில்லை வாழ்ந்துள்ளார் என்று தான் கூறவேண்டும்.படத்தின் மீதும் கதையின் மீதும் சசிகுமார் நம்பிக்கை கொண்டு நடித்தது வீண்போகவில்லை என்று தான் கூறவேண்டும்.சினிமாவில் சறுக்கலை சந்தித்து வரும் சசிகுமாருக்கு இப்படம் நிச்சயம் ஒரு நல்ல வரவேற்பினை மீண்டும் பெற்றுக்கொடுக்கும் என்றே கூறலாம்.படத்தில் வடமாநில கதாபாத்திரங்கள் அதிகம் வருவது நன்றாக இருக்காது என்று நினைத்துக்கொண்டு இருந்த நிலையில் அவர்களின் கதாபாத்திரத்திலும் ஆழத்தை கொடுத்து அவர்களையும் ரசிக்க வைத்துவிட்டார் இயக்குனர்.படத்தில் சசிகுமாருக்கு நண்பனாக வரும் புகழ் படத்தில் நல்ல குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார்,படத்தில் வரும் சிறிய சிறிய விஷயங்கள் கூட படத்திற்கு அவ்வளவு அழகை கொடுத்துள்ளது எனலாம்,மனைவி இறந்ததற்கு பிறகு யஷ்பால் திருந்தும் காட்சி,மகள் அப்பாவை திட்டும் காட்சி என அடுத்தடுத்து புல்லரிக்க வைக்கின்றது.மொத்தத்தில் இப்படம் மனிதன் சொல்லும் மனிதம்

அயோத்தி படத்திற்கு தி இந்தியன் டைம்ஸ் வழங்கும் ரேட்டிங் – 3.5/5

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment