பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கி நேற்று இரவு வரை நடந்தது. இந்த நிலையில் ஆரி பட்டதை வென்று முதல் இடத்தை பெற்றார். பாலா ரன்னர் என்ற முறையில் வெளியேற்ற பட்டார். நாள் ஒன்று முதல் கடைசி நாள் வரை ஆரி தன்னுடைய ஆட்டத்தை நேர்மையான முறையில் விளையாடி கப் வென்றது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அவர் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்வதற்கு முன்பு பல்வேறு படங்களில் நடித்து இருக்கிறார் அதுமட்டுமின்றி பல்வேறு சமூக பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து இருக்கிறார். அது மட்டுமல்லாமல் அவர் தன்னை போராட்ட களத்தில் ஈடுபடுத்தியும் உள்ளார். இதுவரை இவரது புகழ் வெளியில் அதிகமாக தென்படவில்லை என்றாலும் கூட பிக் பாஸ் வீடு இவரக்கு புகழ் உச்சத்தையே கொடுத்து இருக்கிறது.
வீட்டில் இருந்த அனைத்து போட்டியாளர்களும் இவர் மீது தனி வெறுப்பு காட்டினாலும் இவர் அவர்கள் மீது வெறுப்பு காட்டவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. வீட்டில் உள்ள அனைவரும் தங்களுடைய முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அடிக்கடி கூறி வருவார். அது மத்த போட்டியாளர்களை கோபம் அடைய செய்தாலும் கடைசியில் அவரது கருத்தை ஏற்றுக் கொண்டு வெளியேறினர். கப்பை கமல் மற்றும் ஆரியின் மகள் கையில் வாங்கியது அனைவரையும் ரசிக்கும் வகையில் அமைந்தது. ஐம்பது லக்ஷம் பெட்டியை கமல் ஹாசன் ஆரியின் மகள் கையில் கொடுத்து திறக்க சொன்னார். பல்வேறு சந்தோஷமான தருணங்களில் நிறைவேறி இருக்கிறது பிக் பாஸ் சீசன் 4
Video Embed Credits: Backstage Media Youtube Channel
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in