தமிழ் சினிமாவில் தற்போது வாரிசுகள் தாக்கம் அதிகரித்து வருகிறது.இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் தங்களது மகன் மற்றும் மகன்களை களம் இறக்க தொடங்கியுள்ளனர்.அதன்படி இயக்குனர் சங்கர் தனது மகள் அதிதியை கதாநாயகியாக களம் இறக்க உள்ளார்.அடுத்ததாக இயக்குனர் சுந்தர் சி களம் இறக்க உள்ளார்.இப்படி அடுத்தடுத்து இயக்குனர்கள் தங்களது குழந்தைகளை சினிமாவில் அறிமுகப்படுத்தி வருவதால் அவர்களுக்கு தொடர்ந்து பட வாய்ப்பும் அதிகரித்து வருகிறது.இதனால் ஏற்கனவே இருக்கும் கதாநாயகிகள் நிலை மிகவும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது.இது அனைவருக்கும் தெரிந்தது தான்.
தற்போது இயக்குனர் சங்கர் மகள் அதிதி நடிகர் கார்த்திக்கு ஜோடியாக விருமன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாக உள்ளது.இதனை தொடர்ந்து அதிதி நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக கொரோனா குமார் படத்திலும்,நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளார்.அறிமுகம் ஆகிய முதல் படத்திலேயே முன்னணி கதாநாயகி அவதாரம் எடுத்து பல முன்னணி ஹீரோக்களின் படங்களை கைப்பற்றி வருகிறார் அதிதி.இந்நிலையில் பிரபல நடிகை ஆத்மீகா போட்ட பதிவு ஒன்று அதிதி சங்கரை தாக்குவது போல் உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்
மீசையை முறுக்கு படத்தில் கதாநாயகியாக நடித்து சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியவர் தான் ஆத்மீகா இப்படத்தினை தொடர்ந்து சில தமிழ் படங்களில் வாய்ப்பு கிடைத்து படங்கள் நடித்து வருகிறார்.இன்று இவர் நடித்துள்ள காட்டேரி படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.இந்நிலையில் இவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் சிலருக்கு வாய்ப்புகள் எளிதாக அமைந்துவிடுகிறது மற்றவர்கள் நிலைமை…பார்த்துக்கலாம் என பதிவிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் அதிதி சங்கரை தான் ஆத்மீகா மறைமுகமாக சாடுவதாக தெரிவித்துள்ளனர்
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in