Abdul Kalam: கடந்த ஒரு வார காலமாக இணையத்தை ஆக்கிரமித்து கொண்டிருக்கும் பெயர்தான் Abdul Kalam. சிறு வயதிலேயே மிகப்பெரிய கருத்துக்களை கூறி முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களே நேரில் அழைத்து பாராட்டும் வகையில் பேசிய சிறுவன். பெயருக்கு ஏற்றார் போல் மூர்த்தி சிறியது என்றாலும் கீர்த்தி பெரியது என்பது போல் இந்த உலகில் மனித நேயமும், அன்பும்தான் எல்லாமும், அனைவரையும் நேசியுங்கள், வெறுக்காதீர்கள் என்று பேசினான் சிறுவன் அப்துல்கலாம். மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த சிறுவனிடம் எதேச்சையாக கேள்வி கேட்க அந்த சிறுவன் மனிதநேயம் தான் இந்த உலகை வாழ வைக்கும் என கூறினார்.
அந்த காணொளி வெளியாகிய சிறிது நேரத்தில் இணையதளத்தை ஆக்கிரமித்தது. அனைத்து சேனல்களும் அவரை பேட்டி எடுக்க கிளம்பிவிட்டன. இதனால் அப்துல்கலாம் குடியிருந்த வாடகை வீட்டின் உரிமையாளர் தனக்கு ஏதும் பிரச்சினை வரும் எனக் கருதி வீட்டை காலி செய்யுமாறு கூறிவிட்டனர். இதனால் மனமுடைந்த அப்துல்கலாமின் பெற்றோர் கண்ணீருடன் பேட்டியளித்தனர். தாங்கள் கலப்பு திருமணம் செய்ததால் எங்களை பெற்றோர் ஒதுக்கிவிட்டனர் என்றும், அந்த வலியும் வேதனையும்தான் அப்துல்கலாமை இந்த அளவுக்கு யோசிக்க வைத்துள்ளது என்றும் அவர் கூறினார். அவர்கள் வாழ வீடு இல்லை நடுத்தெருவில் நிற்கதியாய் நிற்கிறோம் என கொடுத்த பேட்டி முதலமைச்சர் காதுகளை எட்டியது.
Abdul Kalam நேரில் அழைத்துப்பேசிய முதலமைச்சர் குடிசைமாற்று வாரிய குடியருப்பு பகுதியில் வீடு ஒதுக்கீடு செய்யப்படும் என உறுதியளித்தார். அதன்படி நேற்று அமைச்சர் தா.மோ.அன்பரசனை சந்தித்த சிறுவனின் குடும்பத்தாரிடம் வீடு வழங்குவதற்கான ஆணை வழங்கப்பட்டது. இதையடுத்து இன்று புது வீட்டிற்கு சென்று பார்வையிட்டனர் அப்துல்கலாம் குடும்பத்தினர். இவர்கள் வருகின்றன மார்ச் 3ம் தேதி முதலமைச்சரின் பிறந்தநாள் வருவதையொட்டி அன்று வீட்டில் குடியேறப்போவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். அந்த வீடியோவை நீங்களும் காண…Watch the Video Below..
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in