தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகை அனுராதா.அவரின் மகள் தான் இந்த அபிநய ஸ்ரீ.அம்மாவை போல சினிமாவில் ஏதாவது சாதிக்க வேண்டும் என சிறுவயதிலேயே படத்தில் நடிக்க தொடங்கினார். இவர் 2001 ஆம் ஆண்டு இயக்குனர் சித்திக் இயக்கத்தில் வெளியாகிய பிரண்ட்ஸ் படத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கிடைக்கும் படங்களில் சிறப்புத்தோற்றத்தில் நடிக்க தொடங்கினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
கதாநாயகியாக எந்த படத்திலும் இவருக்கு வாய்ப்பு கிடைக்காததால் சரி கிடைத்தவரை லாபம் என தொடர்ந்து நடிக்க தொடங்கிவிட்டார். தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் நடனத்தில் முழு மூச்சாக களம் இறங்கிவிட்டார்.தற்போது நடனம் ஆடி அசத்தி வருகிறார் அபிநய ஸ்ரீ.இந்நிலையில் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்திவிட வேண்டும் என எண்ணி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பிக் பாஸ் 6 நிகழ்ச்சியினை நாகார்ஜூனா தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அபிநய ஸ்ரீ குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறினார்.பின்னர் இவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது ,தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் நாங்கள் நேரம் போகவில்லை என்றால் இணைந்து பாட்டு பாடுவோம்,அதை கூட அங்க பிக் பாஸ் அனுமதிக்கமாட்டார்.இது ரொம்ப கொடுமையாக இருந்தது.தமிழில் சாண்டி கலந்துகொண்ட பொழுது பாட்டு பாடி அசத்துவார்,ஆனால் தெலுங்கில் அனுமதி இல்லை பாடல் பாடுவதற்கு என தெரிவித்துள்ளார்.
Embed video credits : LITTLE TALKS
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in