தமிழ் சினிமாவில் சிறந்ததோர் நகைச்சுவை நடிகர் குமரி முத்து.அவரது சிரிப்பால் நம்மையும் சிரிக்க வைத்தவர்.சினிமாவின் மேல் கொண்ட காதலால் சினிமாவில் எப்படியாவது நடிக்க வேண்டும் என வாய்ப்பு தேடினார்.அப்பொழுதுதான் பிரபல இயக்குனர் மகேந்திரன் இயக்கத்தில் உதிரிப்பூக்கள் படத்தில் வாய்ப்பு கிடைத்தது.1979 ஆம் ஆண்டு வெளியாகிய உதிரிப்பூக்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார்.
அதன்பின் தொடர்ச்சியாக படங்களில் நடிக்க தொடங்கி,சிறந்த நகைச்சுவை நடிகராக அனைவரையும் சிரிக்க வைத்தார்.ரஜினி,கமல் படங்களில் தொடங்கி தற்போதுள்ள முன்னணி நடிகர்களின் படங்கள் வரை நடித்துவிட்டார் குமரி முத்து. கிட்டத்தட்ட இவரது 30 வருட சினிமா வாழ்க்கையில் 728 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.நடிப்பில் மட்டுமில்லாமல் அரசியலிலும் ஈடுபாடு இருந்ததால் பிரபல கட்சி ஒன்றில் இணைந்து நட்சத்திர பேச்சளராகவும் வலம் வந்தார்.
இவர் இறுதியாக நடித்த படம் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகிய வில்லு.இவர் தனது 75வயதில் உடல்நல குறைவால் இயற்கை எய்தினார்.இவரது மறைவு தமிழ் சினிமாவிற்கு பெரும் இழப்பு என்பது மறுக்கமுடியாத ஒன்று.இதுவரை எந்த நிகழ்ச்சிகளிலும் தனது குடும்பத்தினை அறிமுகம் செய்துகொள்ளாதவர் இவர்.தற்போது இவரது மகள் எலிசபத் குமரி முத்து தனது இணையப்பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு,தான் குமரித்து மகள் எலிசெபத் குமரிமுத்து என அறிமுகம் ஆகியுள்ளார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் நீங்கள் அப்படியே அப்பா போலயே உள்ளீர்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in