வெகு நாட்களுக்கு பிறகு பாவ கதைகள் படத்தில் சுதா கொங்கரா இயக்கிய தங்கம் படத்தில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தார் இயக்குனர் பாக்கியராஜ் அவர்களின் மகன் நடிகர் சாந்தனு. தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் இயக்குனர் மற்றும் நடிகராக இருந்தவர் பாக்யராஜ். அவருக்கு பின் அவருடைய மகன் சாந்தனு சினிமாவில் குதித்தார். இவரது முதல் படமான சக்கரக்கட்டி எதிர்ப்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை. இருந்தாலும் இந்த படத்தின் பாடல்கள் அனைத்துமே பெரியளவில் வெற்றியடைந்தது. அதன் பிறகு இவர் தேர்ந்துடுத்த கதைகள் ஏதும் சாந்தனுவிற்கு பாராட்டுகளை வாங்கி தரவில்லை.
இறுதியாக இவர் நடித்த படம் மாஸ்டர். ஆனால் இந்த படத்தில் சில காட்சிகளில் மட்டுமே இவர் இடம்பெற்றதால் நெட்டிசன்கள் இவரை மீம்ஸ் போட்டு வெச்சு செய்தனர். இந்நிலையில் தற்போது முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார்.முருங்கக்காய் சிப்ஸ், கே பாக்யராஜ், சாந்தனு பாக்யராஜ், அதுல்யா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் தமிழ் திரைப்படம்.
இவருக்கும் தொகுப்பாளினியாக இருந்த கிகி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் செய்யும் குறும்புகளை யூடூப்பில் பதிவேற்றி வருகின்றனர். தற்போது இவர்கள் இருவரும் மாலத்தீவு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு கிகி பிறந்தநாளுக்காக சாந்தனு சர்ப்ரைஸ் செய்துள்ளார். அதை பார்த்து கிகி சந்தோஷத்தில் துள்ளி குதிக்கிறார். அந்த அழகான வீடியோவை நீங்களும் காண.. Watch the Below Video..
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in