மயில்சாமி உடலை பார்த்து தேம்பி தேம்பி அழுத நடிகர் சித்தார்த்…. துக்கத்தில் பேசமுடியாமல் அவதிபட்ட சித்தார்த்தை கண்டு ரசிகர்கள் மேலும் கலக்கம்

ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தை சேர்ந்தவர் மயில்சாமி.சினிமா மீது கொண்ட ஆசையால் சினிமாவில் வாய்ப்பு தேட தொடங்கினார். இவர் பட்ட கஷ்டத்திற்கு பலனாய் 1984ஆம் ஆண்டு வெளியாகிய தாவணி கனவுகள் என்ற படத்தில் வாய்ப்பு கிடைத்து அதன் மூலம் சினிமாவில் கால் தடம் பதித்து தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார்.இவர் நடிகர் மட்டும் இல்லை மிமிக்ரி,தொகுப்பாளர்,சமூக சேவகர் என பல முகங்களை கொண்டுள்ளவர் மயில்சாமி.இன்று வரை இவரது காமெடிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

மயில்சாமி உடலை பார்த்து தேம்பி தேம்பி அழுத நடிகர் சித்தார்த்.... துக்கத்தில் பேசமுடியாமல் அவதிபட்ட சித்தார்த்தை கண்டு ரசிகர்கள் மேலும் கலக்கம் 1

விளம்பரம்

1988 ஆம் ஆண்டு கமல்ஹாசனுடன் வெற்றிவிழா,அபூர்வ சகோதரர்கள் மைக்கேல் மதன காமராஜ் படத்தில் நடித்திருந்தார்.மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினியுடனும் இணைந்து பணக்காரன் உழைப்பாளி படத்திலும் நடித்துள்ளார்.மேலும் இவர் விஜயகாந்த்,சத்யராஜ்,விஜய் ,அஜித்,லாரன்ஸ் என பல முன்னணி நட்சத்திரங்களுடனும் நடித்துவிட்டார்.தனது தனித்துவமான காமெடியினால் மக்களை சிரிக்க வைப்பதில் வல்லவர்.இவ்வாறு மக்களை சிரிக்க வைக்கும் பணியினை செய்துகொண்டிருந்த மயில்சாமி இன்று இன்று அதிகாலை 3:30 மணிக்கு அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு இயற்கை எய்தியுள்ளார்

மயில்சாமி உடலை பார்த்து தேம்பி தேம்பி அழுத நடிகர் சித்தார்த்.... துக்கத்தில் பேசமுடியாமல் அவதிபட்ட சித்தார்த்தை கண்டு ரசிகர்கள் மேலும் கலக்கம் 2

விளம்பரம்

இந்த செய்தி தமிழ் சினிமாவில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியது.ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் அவருக்கு தனது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.பார்க்க வரும் அனைவரும் கண்களில் கண்ணீர் உடன் கதறி அழுது வருகின்றனர்,அந்தளவிற்கு பல நல்லவைகளை செய்துள்ளார் மயில்சாமி.இறுதி மரியாதை செலுத்த வந்த நடிகர் சித்தார்த் மயில்சாமி உடலை பார்த்து கதறி அழுதுள்ளார்.பின்னர் செய்தியாளருக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது, மயில்சாமி அண்ணன் ரொம்ப நல்லவரு,மத்தவங்களை சிரிக்க வைக்கிறது தான் அவர் முதல் வேலையே அடிக்கடி போன் செய்து என்னிடம் பேசுவாரு,இவரின் இழப்பை அவரது குடும்பம் தாங்க சக்தி கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

விளம்பரம்

Embed video credits : POLIMER NEWS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment