தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக நடித்து வருபவர் சிங்கம் புலி. இவர் நடிப்பிற்கென பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக இருந்த இவர், அஜித்தின் ரெட் படத்தை இயக்கி இயக்குனராக உருவெடுத்தார். பின்னர் நடிகர் சூர்யாவை வைத்து மாயாவி படத்தை எடுத்து இருந்தார்.
இயக்குனராக இருந்த இவரை தற்போது இயக்குனர் எழில் தனது தேசிங்கு ராஜா படத்தின் மூலம் மிகப்பெரிய காமெடியனாக உருவாக்கி உள்ளார். நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் தற்போது நடிகர் விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தார்.
இவர் அண்மையில் அளித்த பேட்டியில், தனது மனைவியை பற்றி கூறி உள்ளார்.அதில், என் மனைவி அந்தமானை சேர்ந்தவர் எனவும், தற்போது அவர் ராணுவத்தில் முக்கிய பொறுப்பில் இருந்து வருவதாக கூறி உள்ளார். மேலும் என் மனைவி பொதுவாக ஹிந்தி படங்களைத்தான் பார்ப்பார் எனவும், நான் நடித்துள்ள 4 படங்களை மட்டுமே பார்த்து உள்ளதாக கூறி உள்ளார்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in