தமிழ் சினிமாவில் நடிக்க உடல் நிறம் தேவையில்லை என்பதை வெளிப்படுத்தியவர் விஜயகாந்த்.திறமை இருந்தால் போதும் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதை தெரிவுபடுத்தியவர்.
சினிமாவில் நடிக்க வேண்டும் என கனவை மட்டும் கொண்டு மதுரையில் இருந்து சென்னை வந்து வாய்ப்பு தேடினார்,இவருக்கு 1979 ஆம் ஆண்டு இனிக்கும் இளமை என்ற படத்தில் வாய்ப்பு கிடைத்தது கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி சினிமாவில் அறிமுகம் ஆகினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Embed Video Credits : PUTHIYA THALAIMURAI TV
இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் கதாநாயகனாக கலக்க தொடங்கினார்.இவருக்கு 1981 ஆம் ஆண்டு வெளியாகிய சட்டம் ஒரு இருட்டறை படம் பெரும் வரவேற்பினை சினிமாவில் பெற்றுக்கொடுத்து முன்னணி நடிகராக்கியது.
இந்நிலையில் இவர் உடல்நல குறைவால் காலமானார்.இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விஜயகாந்த் உடல் கோயம்பேட்டில் உள்ள அவரது தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.இவரது நினைவிடத்தில் நடிகர் சூர்யா கதறி அழுது அஞ்சலி செலுத்தியுள்ளார்.இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in