நடிகர் சூர்யா நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் .இப்படத்தில் இவருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து பல படங்களில் தொடர்ச்சியாக சூர்யா நடித்து வந்தார்.இவர் நடித்த அனைத்து படங்களிலும் இவருக்கு நடிகர் என்ற அந்தஸ்து கிடைத்ததே தவிர முக்கிய நடிகர் என்ற அந்தஸ்து கிடைக்கவில்லை.அதற்காக போராடிக்கொண்டிருக்கும் பொழுதுதான் இயக்குனர் பாலாவின் நந்தா படத்தில் வாய்ப்பு கிடைத்தது.தனது நடிப்பு திறமையை மொத்தமாக காண்பித்த நடிகர் சூர்யாவிற்கு இப்படம் அவரது சினிமா வாழ்க்கையில் ஒரு மைல்கல் ஆக அமைந்தது.இந்த படத்தின் மூலம் சூர்யா முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தினை அடைந்தார்.
தற்போது பத்து ஆண்டுகள் கழித்து மீண்டும் இயக்குனர் பாலா உடன் வணங்கான் படத்தில் இணைந்துள்ளார்.கதாநாயகியாக க்ரீத்தி ஷெட்டி நடித்துள்ளார்.அண்மையில் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருந்தனர். கன்னியாகுமரி பகுதிகளில் மும்முரமாக ஷூட்டிங் நடைபெற்று வந்தது.இடையில் சூர்யாவுக்கும் பாலாவுக்கு தகராறு ஏற்பட்டுள்ளது,சூர்யா படப்பிடிப்பில் இருந்து கிளம்பிவிட்டார் என பல தகவல்கள் கிளம்பின.
இந்நிலையில் தற்போது வணங்கான் படத்தில் இருந்து சூர்யாவை நீக்கியுள்ளதாக இயக்குனர் பாலா அதிர்ச்சியான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறியதாவது,சூர்யா உடன் படம் இயக்க விரும்பினேன்,ஆனால் வணங்கான் கதையில் சில மாற்றங்களினால் அது சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்ற ஐயம் எனக்கு தற்போது ஏற்பட்டுள்ளது எனவே என் மீதும்,என் கதை மீதும் நம்பிக்கை வைத்துள்ள என் தம்பி சூர்யாவுக்கு என்னால் தர்மசங்கடம் நேர்ந்துவிடக்கூடாது ,எனவே வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகிக்கொள்வது என முடிவெடுத்துள்ளோம்,மற்ற படி வணங்கான் தொடரும் என கூறியுள்ளார்.இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சூர்யா இல்லையென்றால் இப்படத்தில் யார் நடிப்பார்கள் என பெரும் குழப்பமே ஏற்பட்டுள்ளது.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in