நடிகர் வடிவேலுவை தெரியாதவர்கள் தமிழகத்தில் எவரும் இருக்க முடியாது.அந்தளவிற்கு மக்கள் மனதில் நிறைந்துள்ளார் வடிவேலு.இவரின் நகைச்சுவைகள் தான் பலருக்கும் மருந்தாகி வருகிறது. இன்று வரை இவருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே சினிமாவில் உள்ளது.காரணம் தனது எதார்த்தமான பேச்சு மற்றும் ஆக்ஷன்களால் மக்களை சிரிக்கவைப்பதில் இவர் வல்லவர் என்பதால்.தற்போது பல நகைச்சுவை நடிகர்கள் வந்தாலும் இன்று வரை வடிவேலு இடத்தினை பிடித்தவர்கள் எவரும் இல்லை.நகைச்சுவையின் நிரந்தர புலிகேசி மன்னனாக இன்று உள்ளார்.அவர் படங்களில் நடித்தாலும் சரி நடிக்கவில்லை என்றாலும் சரி அவருக்கான இடம் தனி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
என் தங்கை கல்யாணி என்ற தமிழ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து இவர் நடித்த என் ராசாவின் மனசிலே திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.இப்படத்தினை தொடர்ந்து கவுண்டமணி மற்றும் செந்திலுடன் இணைந்து பல படங்கள் நடித்து மிகவும் பிரபலமாகி தனியாக நகைச்சுவை நடிகராக உருமாறி வலம் வர தொடங்கினார்.பல படங்கள் இவரின் நகைச்சுவைக்காகவே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.தற்போது சில ஆண்டுகளாக இயக்குனர் சங்கருக்கும் வடிவேலுக்கு இடையே இருந்த பிரச்சனைகளினால் படங்கள் நடிக்காமல் இருந்தார்
தற்போது இவர் தொடர்ந்து மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.அதன்படி மீண்டும் கதாநாயகனாக இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் படத்தில் நடித்துள்ளார்.லைக்கா நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.இப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் வடிவேலுவை திரையில் காண அவரது ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.தற்போது இவர் குத்தாட்டம் போட்டுள்ளார் ,இந்த வீடியோவை லைக்கா நிறுவனம் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது,வீடியோ வடிவேலு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது
Embed video credits : LYCA PRODUCTION
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in