தமிழ் சினிமாவில் ஹீரோ சான்சிற்காக ஏங்கி தவிக்கும் பலருக்கு மத்தியில் அந்த வாய்ப்பு கிடைத்தும் பெரிய நடிகர்களுடன் நடித்த பிறகும் சரியாக அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளாமல் கோட்டை விட்ட நடிகர்கள் பலர். அந்த வரிசையில் ஒரு சிறந்த வெற்றி படத்தை கொடுக்க போராடி கொண்டிருக்கும் நடிகர் விமல். ஆரம்பகாலங்களில் கில்லி, குருவி, பந்தயம் போன்ற படங்களில் துணை நடிகராக நடித்து வந்த விமல் அஜித் குமார் அவர்களுடன் இணைந்து கிரீடம் படத்திலும் நடித்துள்ளார். இவர் ஹீரோவாக மாறுவதற்கு வாய்ப்பு கொடுத்த திரைப்படம் பசங்க. பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாகிய அந்த படம் தான் விமலுக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகு களவாணி, வாகை சூடவா, கலகலப்பு போன்ற சில வெற்றி வெற்றி படங்களை கொடுத்தாலும் தற்போது அவரால் அனைவரையும் கவர்ந்த கதாநாயகனாக மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியவில்லை.
சில காலத்திற்கு முன்பு வெளியான களவாணி 2 , மன்னர் வகையறா , மாப்பிளை சிங்கம் போன்ற படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு அவருக்கு வெற்றியை தேடி தரவில்லை. தற்போது மீண்டும் ஒரு வெற்றிக்காக காத்திருக்கும் விமல் , முந்தையகாலத்தில் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே சீரியலிலும் நடித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலானது. ராதிகா நடிப்பில் மிகவும் பிரபலமான சித்தி சீரியலில் நடித்துள்ளார் விமல். சிறு வயதிலேயே படிப்பை நிறுத்திய விமல் திருச்சியில் இருந்து சென்னைக்கு வந்தார். அங்கு கூத்துப்பட்டறை என்னும் நாடகக்குழுவில் சேர்ந்து நடிக்க கற்றுக்கொண்டார். இதன் மூலம் சிறு சிறு வேடங்களில் அஜித் விஜய் ஆகியோருடன் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு வந்தது. Youtube Video Code Embed Credits: Galatta
தற்போது இவர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் “விலங்கு”. இந்த படம் வெளியாகி சில நாட்களே ஆகி உள்ளது. இதையடுத்து தனியார் தொலைக்காட்சியில் பேட்டி அளித்த நடிகர் விமலிடம் வாகை சூடவா படத்தில் உங்கள் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்தவர் சிவகார்த்திகேயன். அவர் இன்றைக்கு உங்கள் கூடவே நடித்து இன்று பெரிய இடத்திற்கு சென்று விட்டார். ஆனால் விமல் அப்படியே ஒரே இடத்தில் தேங்கி விட்டடாரே என்ற கேள்வியை எழுப்பினார். அதற்க்கு கடுப்பான விமல் சிவகார்த்திகேயன் கூட எல்லாம் என்ன compare பண்ணாதீங்க..அவங்க அவங்களுக்குனு ஒரு தனி பாதை இருக்கு அதுல போயிட்டே இருக்கோம் என்று கோபமாக கூறினார். மேலும் அவர் உங்க வேலையை நீங்க சரியா பாருங்க என் வேலைய நான் சரியாய் பாப்பேன் என்றும் கூறினார்.. அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the Below Video….
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in