இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் செல்லமே படத்தில் கதாநாயகனாக நடித்து சினிமாவில் அறிமுகம் ஆகியவர் நடிகர் விஷால்.இப்படத்தில் இவருக்கு பெரும் வரவேற்பு தமிழ் சினிமாவில் கிடைத்தது.முதல் படமே மாபெரும் ஹிட் என்பதால் அடுத்தடுத்து தமிழில் பல படவாய்ப்புகள் விஷாலின் கதவை தட்டியது.இதன்மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தினை அடைந்தார். சண்டக்கோழி,திமிரு என வரிசையாக வெற்றிப்படங்களை இறக்கினார்.அறிமுகம் ஆகி முதல் மூன்று படங்களையும் ஹிட் கொடுத்த ஒரே நடிகர் விஷால். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
நடிகர்,தயாரிப்பாளர் தமிழ் சினிமாவை கலக்குபவர் விஷால் மேலும் இயக்குனராகவும் அவதாரம் எடுத்து துப்பறிவாளன் 2ஆம் பாகத்தினை இயக்கியுள்ளார்.இப்படம் விரைவில் வெளிவர உள்ளது.இதனை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மலையாளத்தில் வில்லன் படத்தில் மோகன் லாலுக்கு வில்லனாக நடித்து அசத்தினார்.கடந்த முறை வெளியாகிய வாகை சூட வா படம் நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றது.இப்படத்தினை தொடர்ந்து தற்போது லத்தி படத்தில் நடித்துள்ளார்.இப்படம் டிசம்பர் 22 ஆம் தேதி வெளியாக உள்ளது.அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது
இந்நிலையில் நடிகர் விஷால் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில்,எனக்கு ஆன்லைன் சூதாட்டம் விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது,நான் அதை மறுத்துவிட்டேன் காரணம் உழைத்து சம்பாதிக்கும் பணம் மட்டுமே உடன் வரும்,தவறான வழியில் வரும் பணம் உதவாது என கூறியுள்ளார்.ஏற்கனவே விஷால் மற்றும் சரத்குமாருக்கு இடையே மனக்கசப்பு இருக்கும் நிலையில் தற்போது ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்து வரும் சரத்குமாரை விஷால் தாக்கி பேசியுள்ளதாக நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in