இன்று உலகம் முழுவதும் தந்தையர் தினத்தை கொண்டாடி வருகின்றனர்.ஒருவரின் அன்னை எவ்வளவு முக்கியமோ அதற்கு பல மடங்கு முக்கியம் தந்தை ஆவார்.தான் படும் கஷ்டங்களை ஒரு நாளும் குடும்பத்திடம் காட்டிக்கொள்ளாமல் தனது மகன் மற்றும் மகள்களை இன்னொரு அம்மாவாக வளர்க்கிறார் தந்தை,அந்த தந்தைக்கு நன்றி கூறும் விதமாகத்தான் இன்று தந்தையர் தினம் கடைபிடிக்கப்பட்டு இருக்கிறது.
தமிழ் சினிமா நட்சத்திரங்கள் இன்று பலரும் தங்களது தந்தையுடன் புகைப்படம் எடுத்து தந்தையர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வந்துள்ளனர்.
இவர்களின் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதில் அனைத்து நடிகர்கள் மற்றும் நடிகைகளும் தனது தந்தையை கட்டியணைத்து கொண்டு அவர்களுடன் புகைப்படம் எடுத்திருப்பது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது என்றே கூறலாம்.
நடிகர்கள் வாழ்வில் தந்தை பெரும் பங்கு வகுத்திருப்பார்,அவர்களுக்கான நேரம் வரும்வரை அவர்களை பொறுமையாக இருக்கும்படி அறிவுரை கூறியிருப்பார்கள்.
தந்தையின் அறிவுரையை கேட்ட பலர் தான் தற்போது முன்னோடியான இடத்தில இருக்கின்றனர்,அது சினிமாவாக இருந்தாலும் சரி பிற துறைகளாக இருந்தாலும் சரி.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in