கடல் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர் கவுதம் கார்த்திக். நடிகர் கார்த்திக்கின் மகனான இவர் தந்தையை போல சினிமாவில் சாதிக்க வேண்டும் என அறிமுகம் ஆகினார். ஆனால் இவருக்கு சினிமாவில் தந்தை பெற்ற இடம் கிடைக்கவில்லை. இருப்பினும் தனக்கான ரசிகர்களுக்கு தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்து வருகிறார்.
இவர் நடிப்பில் வெளியான ரங்கூன், இவன் தந்திரன் போன்ற படங்களுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அண்மையில் இவருக்கு வெளியாகிய ஆகஸ்ட் 16 படம் நல்ல வரவேற்பினை ரசிகர்கள் மத்தியில் கொடுத்து உள்ளது. இவர் அடுத்தடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இவர் நடிகை மஞ்சிமா மோகனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நிலையில், இன்று இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படத்தினை வெளியிட்டு உள்ளனர். இந்த புகைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. ரசிகர்கள் இருவரின் ஜோடிப்பொருத்தமும் சூப்பர் என கூறி அவர்களை வாழ்த்தி வருகின்றனர்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in