தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா.தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தி வந்தவர் இவர்.இவர் நவயுகம் என்ற படத்தில் கதாநாயகியாக தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகினார்.பின்னர் தமிழில் இவர் கதாநாயகியாக நடித்த என் ராசாவின் மனசிலே பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றது.இந்த படத்தில் இவருக்கு கிடைத்த நல்ல வரவேற்பினை தொடர்ந்து தமிழ் தெலுங்கு என பல மொழிகளிலும் கதாநாயகியாக நடித்து அசத்தினார்.தமிழ் பல முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டார் மீனா.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
தமிழ் சினிமாவில் இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை சேர்த்துக்கொண்டு பல வெற்றிப்படங்களை தமிழில் அளித்தவர்.ரஜினி,கமல்,அஜித் என பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து விட்டார் மீனா.அண்மையில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய அண்ணாத்த படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருப்பார்.தற்போது வயது ஆகிவிட்டதால் கதாநாயகியாக நடிக்காமல் குண சித்திர வேடத்தில் நடித்து அசத்தி வருகிறார்.தமிழில் மட்டுமில்லாமல் மலையாளத்திலும் பல படங்கள் நடித்து மக்களின் மனதினை கவர்ந்துள்ளார் மீனா .மலையாளத்தில் த்ரிஷ்யம் படத்தின் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தில் மோகன் லாலுக்கு ஜோடியாக நடித்து அசத்தி இருப்பார்
மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவே அவருக்கு சென்னை ஆழ்வார்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.மேலும் அவருக்கு நுரையீரல் பாதிப்பும் இருந்துள்ளதால் சிகிச்சை பலனளிக்காமல் ஜூன் 28 ஆம் தேதி இரவு இயற்கை எய்தினார்.நடிகை மீனாவின் கணவருக்கு சூப்பர் ஸ்டார் முதல் பல நடிகர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி சென்றனர்.பலரும் மீனாவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.இந்நிலையில் மீனா தனது காதல் கணவர் வித்தியாசகர் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.இது ரசிகர்களை மேலும் கவலையடைய செய்துள்ளது.எப்படி இருந்த குடும்பம் இப்படி ஆகிவிட்டதே என ரசிகர்கள் வேதனையுடன் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Embed video credits :Gup Chup Masthi
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in