தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா.தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தி வந்தவர் இவர்.இவர் நவயுகம் என்ற படத்தில் கதாநாயகியாக தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகினார்.பின்னர் தமிழில் இவர் கதாநாயகியாக நடித்த என் ராசாவின் மனசிலே பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றது.இந்த படத்தில் இவருக்கு கிடைத்த நல்ல வரவேற்பினை தொடர்ந்து தமிழ் தெலுங்கு என பல மொழிகளிலும் கதாநாயகியாக நடித்து அசத்தினார்.தமிழ் பல முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டார் மீனா.தமிழ் சினிமாவில் இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை சேர்த்துக்கொண்டு பல வெற்றிப்படங்களை தமிழில் அளித்தவர்.ரஜினி,கமல்,அஜித் என பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து விட்டார் மீனா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவே அவருக்கு சென்னை ஆழ்வார்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.மேலும் அவருக்கு நுரையீரல் பாதிப்பும் இருந்துள்ளதால் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த ஜூன் 28 ஆம் தேதி இரவு இயற்கை எய்தினார்.இது சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை அளித்தது.பெண் குழந்தையுடன் மீனா செய்வதறியாது கணவர் இறுதி சடங்கில் நிற்கும் புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலாகியது.மீனாவின் முகத்தில் அந்த பழைய சிரிப்பை எப்பொழுது பார்க்கப்போகிறோம் என ரசிகர்கள் ஏங்கி வந்தனர்.தற்போது கணவர் இறப்பில் இருந்து மீண்டு வரும் மீனா,தனது நண்பர்களுடன் சேர்ந்து அடிக்கடி வெளியே சென்று இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்.
அண்மையில் இவருக்கு 40 ஆண்டு சினிமா பயணத்தை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் அம்மா மீனாவுக்கு தெரியாமல் மகள் நைனிகா வீடியோயோவில் பேசியுள்ளார்.அதில் பல நியூஸ் சேனல்கள் எங்க அம்மாவை பத்தி தவறா பேசுறாங்க,அவங்களும் மனுஷங்கதான் இப்படியெல்லாம் பண்ணாதீங்க ப்ளீஸ் என மிகவும் வருத்தப்பட்டுள்ளார்.இதனை கண்டு மீனா கண்கலங்கியுள்ளார்.இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது
Embed video credits : BEHINDWOODS TV
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in