கணவர் புகைப்படத்துடன் நடிகை மீனா வெளியிட்ட உருக்கமான பதிவு…கண்கலங்கிய ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா.தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தி வந்தவர் இவர்.இவர் நவயுகம் என்ற படத்தில் கதாநாயகியாக தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகினார்.பின்னர் தமிழில் இவர் கதாநாயகியாக நடித்த என் ராசாவின் மனசிலே பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றது.இந்த படத்தில் இவருக்கு கிடைத்த நல்ல வரவேற்பினை தொடர்ந்து தமிழ் தெலுங்கு என பல மொழிகளிலும் கதாநாயகியாக நடித்து அசத்தினார்.தமிழ் பல முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டார் மீனா.தமிழ் சினிமாவில் இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை சேர்த்துக்கொண்டு பல வெற்றிப்படங்களை தமிழில் அளித்தவர்.ரஜினி,கமல்,அஜித் என பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து விட்டார் மீனா.

கணவர் புகைப்படத்துடன் நடிகை மீனா வெளியிட்ட உருக்கமான பதிவு...கண்கலங்கிய ரசிகர்கள் 1

விளம்பரம்

மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவே அவருக்கு சென்னை ஆழ்வார்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.மேலும் அவருக்கு நுரையீரல் பாதிப்பும் இருந்துள்ளதால் சிகிச்சை பலனளிக்காமல் ஜூன் 28 ஆம் தேதி இரவு இயற்கை எய்தினார்.இது மீனாவுக்கு அவரது மகள் நைனிகாவிற்கும் பெரிய இழப்பு ஆகும்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சரத்குமார் என பல பிரபலங்கள் நேரில் சென்று மீனாவின் கணவருக்கு அஞ்சலி செலுத்தினர்.இந்த வீடியோக்கள் இணையத்தில் அதிகளவு வைரலாகியது.இந்நிலையில் தங்களின் திருமண நாளுக்கு 12 நாட்கள் முன்னர் தான் மீனாவின் கணவர் உயிரிழந்தார்.இது பெரும் சோகத்தினை ரசிகர்களிடம் உண்டாக்கியது.

கணவர் புகைப்படத்துடன் நடிகை மீனா வெளியிட்ட உருக்கமான பதிவு...கண்கலங்கிய ரசிகர்கள் 2

விளம்பரம்

தற்போது கணவன் மறைவுக்கு பின்னர் முதல் முறையாக அவருக்காக உருக்கமான பதிவினை வெளியிட்டுள்ளார் மீனா,அதில் அவர் கூறியதாவது, நீங்கள் எங்களுடைய அழகிய ஆசீர்வதிக்கப்பட்ட நபராக இருந்தீர்கள். ஆனால் எங்களிடம் இருந்து விரைவில் நீங்கள் பறிக்கப்பட்டு விட்டீர்கள். இருந்தாலும் நீங்கள் எங்களுடைய இதயங்களில் என்றென்றும் இருப்பீர்கள்.உலகெங்கிலும் இருந்து பல நல்ல இதயங்கள் எனக்கு ஆறுதல் கூறியதற்கு இந்த சமயம் நான் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். உங்களின் அன்பும் ஆதரவும் இன்றும் கண்டிப்பாக எங்கள் குடும்பத்திற்கு தேவை. அன்பும் ஆதரவும் உள்ள நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரைநாங்கள் பெற்றிருப்பதற்கு மிகவும் நன்றி உடையவர்களாக இருக்கிறோம் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.இவரின் இந்த பதிவு வைரலாகி வருகிறது

கணவர் புகைப்படத்துடன் நடிகை மீனா வெளியிட்ட உருக்கமான பதிவு...கண்கலங்கிய ரசிகர்கள் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment