தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா.தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தி வந்தவர் இவர்.இவர் நவயுகம் என்ற படத்தில் கதாநாயகியாக தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகினார்.பின்னர் தமிழில் இவர் கதாநாயகியாக நடித்த என் ராசாவின் மனசிலே பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றது.இந்த படத்தில் இவருக்கு கிடைத்த நல்ல வரவேற்பினை தொடர்ந்து தமிழ் தெலுங்கு என பல மொழிகளிலும் கதாநாயகியாக நடித்து அசத்தினார்.தமிழ் பல முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டார் மீனா.தமிழ் சினிமாவில் இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை சேர்த்துக்கொண்டு பல வெற்றிப்படங்களை தமிழில் அளித்தவர்.ரஜினி,கமல்,அஜித் என பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து விட்டார் மீனா.
மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவே அவருக்கு சென்னை ஆழ்வார்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.மேலும் அவருக்கு நுரையீரல் பாதிப்பும் இருந்துள்ளதால் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த ஜூன் 28 ஆம் தேதி இரவு இயற்கை எய்தினார்.இது சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை அளித்தது.பெண் குழந்தையுடன் மீனா செய்வதறியாது கணவர் இறுதி சடங்கில் நிற்கும் புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலாகியது.தற்போது மீனா அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார்.அண்மையில் இவரது நெருங்கிய நண்பர்களான சங்கீதா மற்றும் ரம்பா ஆகியோர் மீனாவை வெளியே அழைத்து சென்று அவருக்கு உறுதுணையாக நிற்கின்றனர்.
இந்நிலையில் நடிகை மீனா சர்வதேச உடல் உறுப்பு தான தினத்தினை முன்னிட்டு தனது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.அந்த பதிவில் அவர் கூறியதாவது,என் கணவர் வித்தியாசகருக்கு உடல் உறுப்புகளை யாரவது தானம் செய்ய வந்திருந்தால் அவர் பிழைத்திருப்பார் அப்படி நடந்திருந்தால் என் வாழ்க்கையும் மாறி இருக்கும் ஒருவாறு உறுப்பு தானம் செய்வதன் மூலம் பேருக்கு மறுவாழ்வு கிடைக்கிறது .இதன் முக்கியத்துவத்தினை நான் உணர்ந்து கொண்டேன் அதன்படி எனது உடல் உறுப்புகளையும் தானம் செய்வதாக தெரிவித்துள்ளார்
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in