The Indian Times

இளைஞர்களோடு கபடி விளையாடிய நடிகை ரோஜா!! முழு விவரம் உள்ளே!!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய திரையுலகில் கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை ரோஜா. 80ஸ் கிட்ஸ் கனவு கன்னியாக வலம் வந்த இவர் பல முன்னணி கதாநாயகர்களுடன் பணியாற்றியுள்ளார்.

Advertisement

இவர் இயக்குனர் செல்வமணி அவர்களை காதல் திருமணம் செய்து கொண்டார் என்பதும் அனைவரும் அறிந்ததே! ஆந்திர மாநிலத்தில் பிறந்த இவர் சில வருடங்களாக அரசியலில் முழு வீச்சாக செயல்பட்டு தற்போது நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் நகரி மற்றும் புத்தூர் தொகுதிக்கு பிரச்சாரத்திற்கு சென்ற அவர் நிந்திரா என்ற இடத்தில் தனியார் பள்ளி ஒன்றில் மாவட்ட இடையிலான கபடி விளையாட்டு போட்டியை துவக்கி வைக்க சென்றார்.

Advertisement

அப்போது இளைஞர்களோடு தனக்கு மிகவும் பிடித்த சிறுவயது விளையாட்டான கபடி விளையாட்டை நினைவுகூரும் விதமாக விளையாடி மகிழ்ந்துள்ளார். வெறும் பேச்சுக்காக விளையாடி விட்டு செல்லாமல் ரேணிகுண்டா அணியில் சேர்ந்து திருவாலங்காடு அணிக்கு எதிராக விளையாடினார். இவர் விளையாடுவதை பார்த்த நிந்திரா வாழ் மக்கள் அனைவரும் அங்கு திரண்டனர் மற்றும் கை தட்டி உற்சாக படுத்தினர். விளையாடி முடித்த பின் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்த அவர் தான் பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் காலங்களில் கபடி விளையாடியதாகவும் மற்றும் கபடி தனக்கு மிகவும் பிடித்த ஒன்று என கூறியுள்ளார். அவர் விளையாடிய காட்சிகளை கீழே உள்ள வீடியோவில் காணுங்கள்!! Watch the video below!!

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in