எனக்கா இவ்வளவு கூட்டம்….திரையரங்கில் ரசிகர்கள் கூட்டத்தினை கண்டு நெகிழ்ச்சியாகிய அதிதி ஷங்கர்

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர்.குறைந்த அளவே படங்கள் இயக்கி இருந்தாலும் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார்.காரணம் இவர் படத்தில் உள்ள கதையும் அதில் இருக்கும் பிரம்மாண்டமும் தான்.பல முன்னணி நடிகர்களும் இவர் நடிப்பில் ஒருமுறையாவது நடித்துவிடமாட்டோமா என ஏங்கி வருகின்றனர்.தற்போது இயக்குனர் சங்கர் தெலுங்கில் ராம் சரணை வைத்து ஆர்சி 15 என்ற படத்தினை இயக்கி வருகிறார்.இப்படத்தின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஷங்கர் இயக்கத்தில் உருவாக்கிய எந்திரன்,2.0 போன்ற படங்கள் எல்லாம் மாபெரும் வரவேற்பினையும் வசூலையும் தமிழ் சினிமாவுக்கு பெற்று கொடுத்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

எனக்கா இவ்வளவு கூட்டம்....திரையரங்கில் ரசிகர்கள் கூட்டத்தினை கண்டு நெகிழ்ச்சியாகிய அதிதி ஷங்கர் 1

விளம்பரம்

இவரது மகளை தற்போது படத்தில் அறிமுகம் செய்துள்ளார்.நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் விருமன் படத்தின் மூலம் அதிதிசங்கர் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாக உள்ளார்.அண்மையில் இப்படத்தில் இருந்து கஞ்சா பூவே கண்ணழகி எனும் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.சூரி நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.காலை முதல் ரசிகர்கள் படத்தினை கண்டு வருகின்றனர்.அதிதியின் முதல் படம் என்பதால் அதனை காண இயக்குனர் ஷங்கரும் ஆவலாக உள்ளார்.

எனக்கா இவ்வளவு கூட்டம்....திரையரங்கில் ரசிகர்கள் கூட்டத்தினை கண்டு நெகிழ்ச்சியாகிய அதிதி ஷங்கர் 2

விளம்பரம்

இந்நிலையில் சென்னையில் இன்று காலை ரசிகர்களுடன் திரையரங்கில் படத்தினை கண்டுள்ளார் நடிகை அதிதி.திரையரங்கு வரும்போது சூழ்ந்திருந்த ரசிகர்களை கண்டு நெகிழ்ந்த்துள்ளார்.அவர்களுக்கு கை காண்பித்து அங்கிருந்து திரையரங்கிற்குள் சென்றுள்ளார்.அவரை ரசிகர்கள் கூட்டம் சூழ்ந்துகொள்ளவே அவரை திரையரங்குக்கு பாதுகாப்பாளர்கள் அழைத்து சென்றுள்ளனர்.முதல் முறையாக தனது படத்துக்காக கூடிய ரசிகர்களை பார்த்து நெகிழ்ந்துள்ளார் அதிதி

விளம்பரம்

Embed video credits : Galatta tamil

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment