சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகள் தான் ஐஸ்வர்யா தனுஷ். இவர் கடந்த 18 வருடங்களுக்கு பிரபல இயக்குனர் கஸ்தூரி ராஜா அவர்களின் இளைய மகனான நடிகர் தனுஷ் அவர்களை மணம் முடித்தார். தன்னைவிட வயதில் மூத்தவர் என்ற போதிலும் பல எதிர்ப்புகளுக்கும், சச்சரவுகளுக்கும் நடுவில் தனுஷ் ஐஸ்வர்யாவை கரம் பிடித்தார். 18 வருடங்கள் கடந்து விட்டப் பிறகு தானும் ஐஸ்வர்யாவும் பிரிந்து விட்டதாகவும், மனைவியாகவும், நல்ல தோழியாகவும் இருந்த ஐஸ்வர்யாவுக்கு நன்றி எனவும், தாங்கள் இருவரும் இனி தனித்தனியாக தங்கள் பணத்தை தொடர உள்ளதாகவும், தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் தனுஷ் தெரிவித்து இருந்தார்.
இது தனுஷ் ரசிகர்களிடையேவும், குறிப்பாக அவரது மாமனாரான சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்ப்படுத்தியுள்ளது. 18 வருடம் ஒன்றாக வாழ்ந்த பிறகு இரண்டு பிள்ளைகள் பிறந்த பிறகு இவ்வாறு மணவாழ்க்கையை முறித்துக் கொள்வது ஏற்ப்புடையது இல்லை என்று ஒரு தரப்பினரும், இது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் என்று மற்றொரு தரப்பும் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் சமூக வலைத்தளத்தில் இந்த தகவல் வெளியான பின்பு இதுவரை தனுஷிடம் இருந்தோ, ரஜினியிடம் இருந்தோ அதிகாரப்பூர்வமாக எந்த செய்தியோ, பேட்டியோ வெளியாகவில்லை. Youtube Video Embed Code Credits: Cineulagam
இவர் தற்போது கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், எவ்வளவு முன்னெச்சரிக்கையாக இருந்தும் தனக்கு கொரோனா வந்துவிட்டதாகவும், தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அனைவரும் வெளியில் செல்லும் போது மாஸ்க் அணியுமாறும், தடுப்பூசி எடுத்து கொள்ளுமாறும் அவர் கேட்டு கொண்டுள்ளார். 2022ல் இன்னும் என்ன என்னவெல்லாம் பார்க்க வேண்டுமோ என அவர் தெரிவித்துள்ளார். Watch the below video.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in