துப்பாக்கி சூடு போட்டியில் சாதனை படைத்த தல அஜித்குமார்

காதல் மன்னன் என அனைவராலும் செல்லமாக அழைக்கப்படுபவர் அஜித்.1993 ஆம் ஆண்டு அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் தல அஜித்.இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் வரிசையாக நடித்து வந்தார்.இவர் நடித்த காதல் கோட்டை திரைப்படம் இவரின் சினிமா வாழ்வுக்கு பெரும் திருப்பு முனையாக அமைந்தது.இப்படம் பெரும் விமர்சையாக வெற்றிபெற்று அஜித்குமாரை தமிழ் சினிமாவிற்கு அடையாளம் காட்டியது.பல தோல்விகள் வந்தாலும் தொடர்ந்து படம் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வருபவர் அஜித்.வரிசையாக தோல்விகளை கண்ட பொழுது அஜித் சினிமா வாழ்க்கை அவ்வளவுதான் என்று நினைத்தவர்கள் மத்தியில் மீண்டும் எழுந்து வந்து பட்டையை கிளப்பினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

துப்பாக்கி சூடு போட்டியில் சாதனை படைத்த தல அஜித்குமார் 1

விளம்பரம்

நடிப்பில் மட்டுமில்லாமல் கார் ரேஸ்.பைக் ரேஸ் ,துப்பாக்கி சுடுதல் என பலவிதமான வித்தைகளை கற்றுக்கொண்டு அதில் வெற்றியும் பெற்றுவருகிறார்.அஜித்குமார் தனது 61வது படத்திற்கு கடினமாக உழைத்து வருகிறார்.இவரது வலிமை படத்தில் இவரது உடல் பருமன் குறித்து கேலி செய்து வந்தனர் அவர்களுக்கு பதிலடி கொடுப்பதுபோல் தல அஜித் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.இப்படத்திற்கு இடைவெளி விட்டு அவர் அண்மையில் வெளிநாடுகளில் பைக் ரைடு செய்து வந்தார்.எல்லாவற்றையும் முடித்து விட்டு தற்போது மீண்டும் சென்னை திரும்பி படப்பிடிப்பில் கலந்துகொள்ள தொடங்கியுள்ளார் அஜித்குமார்.

துப்பாக்கி சூடு போட்டியில் சாதனை படைத்த தல அஜித்குமார் 2

விளம்பரம்

சில தினங்களுக்கு முன்பு அஜித் குமார் திருச்சியில் நடைபெற்று வரும் 47வது மாநில அளவிலான துப்பாக்கி சூடும் போட்டியில் கலந்துகொண்டார்.இந்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி அஜித் குமாரை பார்ப்பதற்கு பெரும் கூட்டம் அங்கு கூடியது.இந்த போட்டியில் 10 மீட்டர், 25 மீட்டர், 50 மீட்டர் என மூன்று சுடுதளத்திலும், பிஸ்டல் பிரிவு போட்டிகளில் கலந்துகொண்டு சிறப்பாக சுட்டார்.இந்த போட்டியில் தற்போது அஜித் குமார் 4 தங்க பதக்கம் இரண்டு வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார் அஜித்.நடிகர் அஜித் அவர்கள் சென்டர் பயர் பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப் பதக்கமும், ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப் பதக்கமும், 50 மீட்டர் பிரீ பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப் பதக்கமும், ஸ்டாண்டர்ட் பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப் பதக்கமும், 50 மீட்டர் பிஸ்டல் ஆண்கள் அணி பிரிவில் வெண்கல பதக்கமும், ஸ்டாண்டர்ட் பிஸ்டல் ஆண்கள் அணி பிரிவில் வெண்கல பதக்கமும் வென்றார்.இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment