தெலுங்கில் அதிக ரசிகர்களோடு ஸ்டைலிஷ் ஸ்டாராக வளம் வரும் நடிகர் அல்லு அர்ஜுன். நடிப்பில் மட்டுமல்ல நடனத்திலும் இவர் சூப்பர் ஸ்டார் தான். எவ்வளவு பெரிய கஷ்டமான ஸ்டெப்ஸ் ஆகா இருந்தாலும் அதை எளிதாக போடா கூடிய திறமை இவருக்கு உண்டு. 2003 ஆம் ஆண்டு திரைப்பயணத்தை துவங்கிய இவர் தற்போது ஏராளமான ரசிகர்களை சேர்த்துவைத்துள்ளார்.
தற்போது அல்லு அர்ஜுன் புஷ்பா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் அந்த படத்தின் டீசர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அல்லு அர்ஜுன் கொரோனவால் பாதிக்கப்பட்டார். அதன் பின்னர் சில நாட்களுக்கு முன்பு கொரோனா நெகடிவ் வந்துவிட்டதாக தன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை கூறினார் அல்லு அர்ஜுன்.
நெகடிவ் வந்த பிறகும் 15 நாட்கள் தனிமை படுத்தப்பட்டு இன்று அவர் வீடு திரும்பினார். அவர் வீடு திரும்பிய பிறகு அவரது மகன் மகளான இருவரும் அவர் அருகில் ஓடி வந்து கட்டித்தழுவி கொஞ்சிய காட்சி அனைவரையும் ரசிக்க கூறலாம். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
https://twitter.com/alluarjun/status/1392363882807652361
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in