ராஜா ராணி என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர்கள் சஞ்சீவ் – ஆல்யா மானசா. இதில் செம்பா என்ற கதாபாத்திரத்தில் ஆல்யாவும், கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக்கும் நடித்து இருந்தனர். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் இருவரையும் தூண்டிவிட, ரசிகர்களின் கோரிக்கைபடி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஐலா சையத் என்று அழகான மகளும் உள்ளனர். ஐலா பார்ப்பதற்கே பொம்மை போல இருப்பார். அவர் அழகாக அங்கும் இங்கும் ஓடி விளையாடுவதை சஞ்சீவ் யூடியூப்பில் பதிவேற்றி வருகிறார்.
ஐலா செய்யும் குறும்புகளையும், அழகான வீடியோக்களையும் ரசிக்க தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்று கூறலாம். தற்போது ஆல்யா மானசா ராஜா ராணி 2 என்ற விஜய் டிவி தொடரில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது ஆல்யா மானசா இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்துள்ளார். அவருக்கு இந்த மாதம் பிரசவத்திற்கு மருத்துவர் தேதி கொடுத்துள்ளார். இதனால் சிறிது காலம் அவர் சீரியலை விட்டு விலக நேர்ந்துள்ளது. ஆனால் இன்ஸ்டாவில் ஆல்யாவிடம் இது குறித்து கேட்டபோது நான் விலகப்போவதில்லை நோ சான்ஸ் என்று கூறியிருந்தார். Youtube video code embed credits: Sanjeev & Alya Youtube Channel
சஞ்சீவ் ஆல்யா மானசா திருமணம் செய்து கொண்டது ஆல்யா குடும்பத்திற்கு பிடிக்கவில்லை. இதனால் அவர்கள் இதுவரை பேசாமலே இருந்து வருகின்றனர். தற்போது ஆல்யாவிற்கு இரண்டாவது குழந்தை பிறக்க உள்ளது. இதனால் 9வது மாதம் சீர் கொடுக்க ஆல்யா சஞ்சீவ்-இன் நண்பர்கள் வீட்டிற்கு வந்துள்ளனர். இதனால் சஞ்சீவ் ஆல்யா இருவரும் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர். அந்த அழகான வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in