சின்னத்திரையில் கதாநாயகியாக வலம் வருபவர் பாவனி.ஹிந்தியில் லாகின் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் இவர்.இதனை தொடர்ந்து பல தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் வஜ்ரம் என்ற தமிழ் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.இவர் நடித்த படங்கள் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தராததால் சின்னத்திரையில் நடிக்க முடிவு செய்து களம் இறங்கிவிட்டார்.இவர் காதலித்து கரம் பிடித்த கணவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் தெலுங்கு நாடகங்களில் நடித்து வந்த இவர் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ரெட்டைவால் குருவி நாடகத்தில் நடித்து தமிழ் சின்னத்திரையில் அறிமுகம் ஆகினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
இவரை தற்போது காதலித்து வருவதாக கூறும் அமீர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலம் ஆகியவர்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் களம் இறங்கி அசத்தி மக்களின் வரவேற்பினை பெற்றார்.இதே நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்தவர் தான் பாவானி.இந்த நிகழ்ச்சியில் பாவனி மீது அமீருக்கு காதல் வரவே அதை பாவனியிடம் கூறியுள்ளார்,அதற்கு வீட்டை விட்டு வெளியே வந்தும் மறுப்பு தெரிவித்து வருகிறார் . பாவனி தனது காதலை என்றாவது ஒருநாள் ஏற்றுக்கொள்வர் என காத்துக்கொண்டுள்ளார் அமீர்.தற்போது இருவரும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடனம் ஆடி வருகின்றனர்.காதலின் முன்னேற்றமாக அமீர் குறித்து யோசிக்க வேண்டும் என பாவனி தற்போது தெரிவித்துள்ளார்.
தற்போது இருவரும் காதலுடன் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இரவு உணவு உண்ணும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் என்ன அமீர் பாவனி ஓகே சொல்லிட்டாங்களா காதலுக்கு என கேள்விகளை கேட்டு வருகின்றனர்.பலரும் இந்த வீடியோ பார்த்து உங்கள் ஜோடி சூப்பர் ,சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோங்க என பல கருத்துக்களை பதிவிட்டு வீடியோவிற்கு லைக்குகளை கொடுத்து இணையத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.இந்த வீடியோவை பார்க்கும் பொழுது ஏதோ விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டது போல் தெரிகிறது.எது எப்படியோ நல்லது நடந்தால் சரிதான்
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in