சின்னத்திரையில் கதாநாயகியாக வலம் வருபவர் பாவனி.ஹிந்தியில் லாகின் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் இவர்.இதனை தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.வஜ்ரம் என்ற தமிழ் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார்.இவர் நடித்த படங்கள் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தராததால் சின்னத்திரையில் நடிக்க முடிவு செய்து களம் இறங்கிவிட்டார்.தெலுங்கு நாடகங்களில் நடித்து வந்த இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ரெட்டைவால் குருவி நாடகத்தில் நடித்து தமிழில் அறிமுகம் ஆகினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
பிக் பாஸ் நிகழ்ச்சியில் களம் இறங்கி அசத்தி மக்களின் வரவேற்பினை பெற்றார்.இதே நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்தவர் தான் அமீர்.இந்த நிகழ்ச்சியில் பாவனி மீது அமீருக்கு காதல் வரவே அதை பாவனியிடம் கூறியுள்ளார்,அதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறார் பாவனி.பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகும் மறுப்பு தெரிவித்து வரும் பாவனி தனது காதலை என்றாவது ஒருநாள் ஏற்றுக்கொள்வர் என காத்துக்கொண்டுள்ளார்.தற்போது இருவரும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடனம் ஆடி வருகின்றனர்.
இந்நிலையில் இருவரும் இன்ஸ்டாகிராம் லைவ் வந்து ரசிகர்களிடம் பேசி வருகையில் அதில் ஒருவர் உங்க ரெண்டு பேரையும் பார்ப்பதற்கு அக்கா தம்பி போல் உள்ளது என்று கூறியுள்ளார்.இதனால் அமீர் கடுப்பாகியுள்ளார்,அதை வீடியோவில் அவர் முகத்தை பார்க்கும்பொழுதே தெரிகிறது. கடுப்பில் நன்றி என கூறியுள்ளார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த அமீர் ரசிகர்கள் கவலைப்படாதீர்கள் அமீர் உங்கள் காதல் ஒருநாள் கைகூடும் என தெரிவித்து வருகின்றனர்.
Embed video credits : Little Talks
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in