பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உலகம் முழுவதும் உள்ளது.பல வெற்றிப்படங்களை ஹிந்தியில் கொடுத்துள்ளார்.தனது ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசத்தினை காண்பித்து நடித்து தனக்கான ரசிகர்கள் கூட்டத்தினை உருவாக்கியவர்.நம் ஊரில் ரஜினியின் பெயரை சொன்னால் விசில் எப்படி பறக்குமோ அப்படி அதான் அமிதாப்பச்சன் பாலிவுட்டில்.இவர் தற்போது தனது 80வது அகவையை எட்டியுள்ளார்,இருப்பினும் படங்களில் ஓய்வில்லாமல் நடித்து வருகிறார்.
தற்போது கதாநாயகனாக நடிக்காமல் முக்கிய கதாபாத்திரத்தில் மட்டும் நடித்து வருகிறார் அமிதாப்பச்சன்.தற்போது இவர் பிரபாஸ் நடிக்கும் பிராஜெக்ட் கே என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பே சினிமாவில் உருவாகி உள்ளது.இப்படத்தின் படப்பிடிபின் பொழுது ஏற்பட்ட விபத்தில் நடிகர் அமிதாப்பச்சன் சிக்கியுள்ளார்.இது இவரின் ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை கொடுத்துள்ளது,இவரின் விபத்து செய்தியை கேட்டதும் ரசிகர்கள் கலக்கியுள்ளார்கள்.
இதுகுறித்து இவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,படப்பிடிப்பின் பொழுது ஏற்பட்ட விபத்தில் தனது விலா பகுதி தசை கிழிந்துள்ளது எனவும் மேலும் rib cartilage உடைந்துள்ளதாகவும் ஹைதராபாத் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.மற்றும் மூச்சு விடும் பொழுது வலி அதிகமாகிறது இது சரியாக சில காலங்கள் ஆகலாம் என தெரிவித்துள்ளார்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in